ETV Bharat / entertainment

லேபில் வெப் தொடரில் அதிக ஆபாச வார்த்தைகள் - செய்தியாளர்கள் கேள்விக்கு படக்குழு அளித்த பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 8:03 AM IST

Updated : Nov 8, 2023, 2:25 PM IST

Press meet of Label: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்து வெளியாக இருக்கும் வெப் தொடர் லேபில். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் அதிக ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருக்கிறது என்ற கேள்விக்கு படக்குழு மழுப்பலாக பதில் அளித்துள்ளது.

Press meet of Label
லேபில் வெப்தொடர்

லேபில் வெப் தொடரில் அதிக ஆபாச வார்த்தைகள்

சென்னை: தமிழ் சினிமாவில் கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர், லேபில். இதில் ஜெய், தான்யா ஹோப், ஸ்ரீமன், சரண் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஓடிடி (OTT) தளத்தில் வருகிற 10ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்த லேபில் வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வடபழனி பிரசாத் லேபில் வைத்து நேற்று (நவ.8) நடைபெற்றது.

இசையமைப்பாளர் சாம்.சி எஸ் மேடையில் பேசுகையில், ‘இணைய தொடர்கள் நிறைய கதை வருகிறது. மக்கள் மனதில் இதை High Quality Serial என்று நினைத்து வருகிறார்கள். சினிமாவைத் தாண்டி இணையத் தொடர் மாறும். இவர்கள் பையன் இப்படிதான் வருவார்கள் என்று இருக்கும் அடையாளத்தை உடைத்து வருகிறோம்.

நிறைய இடங்களில் என்னை தவிர்த்திருக்கிறார்கள். அப்போது நினைத்தேன். சாம்.சிஎஸ் சென்னை என்று நமக்கு யாராவது லெட்டர் அனுப்பினால் வந்து விட வேண்டும் என்று எண்ணினேன். அந்த மாதிரி வடசென்னை என்றாலே அப்படித்தான் என்ற எண்ணம் இருக்கிறது.

அதை மாற்றும் விதமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இதன் இசையும், பாடலும் உங்களை திருப்திபடுத்தும் என நம்புகிறேன். இந்த படத்தில் வேறொரு ஜெய் இருப்பார். அத்தியாயம் (episode) போக போக, அவர் கதாபாத்திரமாக மட்டுமே தெரிவார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மேடையில் பேசுகையில், ‘ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொன்றைக் கற்று வருகிறேன். 3 படைப்புகளை உருவாக்கி விட்டேன்‌. படக்குழு என்னை மிகவும் நம்பினார்கள். படப்பிடிப்பில் எனக்கு பயமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் சினிமாவில் நிறைய அனுபவங்கள் இருக்கும்.

அவர்களோடு நான் பணியாற்றும்போது, எனக்கு வேண்டியதை என்னால் பெற முடிந்தது. கரோனாவுக்குப் பிறகு எனக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டது. ஜெய் உடன் இதற்கு முன்னதாக வேட்டை மன்னன் படத்தில் பணியாற்றினோம்‌. அப்போது இணை இயக்குநராக இருந்தேன்.

அதுபோலவே இப்போதும் எங்களது நட்பு தொடர்கிறது. இந்த படைப்பு உருவாகும் நேரத்தில் எனது அம்மா இறந்தார். சாம்.சிஎஸ் அம்மா இறந்தார். இப்படி பல தடைகள் வந்தாலும் இந்த படம் நல்ல படைப்பாக வந்துள்ளது” என்றார்.

அதன்பின், இந்த தொடரில் இவ்வளவு கெட்ட வார்த்தை தேவையா? ஒட்டுமொத்த தமிழகத்தை இதன் பேரில் அடையாளப்படுத்துகிறார்களா? என்ற‌ செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த படக்குழு, “இந்த வார்த்தை யாரிடம் மாறுகிறது. எதற்காக பேசுகிறார்கள் என்பதுதான் இதன் கருத்து. இந்த வார்த்தைகளை பேசும் ஒட்டு மொத்த நபர்களைத்தான் நான் இந்த தொடரில் குறிக்கிறேன்” என தெரிவித்தனர்.

கல்வி என்றாலே காமராஜர்தான், ஆனால் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் படங்கள் மட்டும் படத்தில் இடம் பெற்றது ஏன்? என்ற கேள்விக்கு, “காமராஜர் படம் இருக்கிறது. பாடலில் இடம் பெற்றிருக்கிறது. மூன்று படங்கள் வைத்தால் கேமரா ஃப்ரேம்க்குள் வரும் என்றுதான் வைத்தோம்.

ஒருவர் உங்கள் மீது வண்டியை விட வந்தால் நீங்கள் அவரை எப்படி திட்டுவீர்கள், அந்த எதார்த்தத்தைதான் நாங்கள் சினிமாவாக காட்டியிருக்கிறோம். இந்த வார்த்தைகள் உங்களை காயப்படுத்தினால் மன்னித்துக் கொள்ளுங்கள்”.

இதனைத் தொடர்ந்து ஜெய் கூறுகையில், ‘நான் படத்தில் எந்த ஒரு கெட்ட வார்த்தையும் பேசவில்லை. அதனால் இது என்னுடைய பிரச்னை இல்லை. கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசும் நபர்களை நான் பார்க்கிறேன். நான் உங்கள் வயிற்றில் குத்தினால், நீங்கள் என்ன வார்த்தை எல்லாம் பேசுவீர்கள் என்று பார்க்கலாம். எதார்த்தமானதைத்தான் சினிமாவாக காட்டியிருக்கிறோம். நானே என் குடும்பத்துடன் உட்கார்ந்து நான்கு கற்பழிப்பு காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:ராஷ்மிகா மந்தனா deep fake வீடியோ விவகாரம்.. 3 ஆண்டுகள் சிறை தண்டனை.. மத்திய அரசு வார்னிங்!

Last Updated :Nov 8, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.