ETV Bharat / entertainment

2 கோடி பார்வையாளர்களை கடந்த பொன்னியின் செல்வன் டீஸர்...

author img

By

Published : Jul 10, 2022, 1:06 PM IST

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

20 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது பொன்னியின் செல்வன் டீஸர்!
20 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது பொன்னியின் செல்வன் டீஸர்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் இந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா கடந்த வெள்ளியன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. டீஸரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறி வருகின்றனர்.

20 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது பொன்னியின் செல்வன் டீஸர்!
20 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது பொன்னியின் செல்வன் டீஸர்!

இந்நிலையில் படத்தின் டீஸர் தற்போது வரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இனிவரும் நாட்களில் படம் குறித்த முக்கிய அப்டேட் அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் சௌந்தரராஜாவின் வித்தியாச நடிப்பில் உருவான 'சாயாவனம்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.