ETV Bharat / entertainment

தேசிய விருதுகள் 2020 : சிறந்த திரைப்படம்(தமிழ்) - ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

author img

By

Published : Jul 22, 2022, 5:00 PM IST

Updated : Jul 22, 2022, 5:28 PM IST

தேசிய விருதுகள் - 2020 சிறந்த திரைப்படத்திற்கான (தமிழ்) விருதை இயக்குநர் வசந்த் இயக்கத்தில் உருவான ‘சிவ ரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் பெற்றுள்ளது.

தேசிய விருதுகள் 2020 : சிறந்த திரைப்படம்(தமிழ்) - ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’
தேசிய விருதுகள் 2020 : சிறந்த திரைப்படம்(தமிழ்) - ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ’சோனி லிவ்’ ஓடிடி தளத்தில் வெளியான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான (தமிழ்) விருதை பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியாகும் முன்பே பல திரைப்பட விழாக்களுக்கு அப்படக்குழுவினரால் அனுப்பப்பட்டு விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது தேசிய விருது- 2020இல் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை இந்தப் படம் பெற்றுள்ளது. மேலும், இந்தப் படத்தில் நடித்த லக்‌ஷ்மி பிரியாவிற்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும், சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை இந்தப் படத்தின் படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ‘ - ஒரு பார்வை

Last Updated :Jul 22, 2022, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.