ETV Bharat / entertainment

மொய்தீன் பாய் பொங்கலுக்கு வருகிறார்..! லால்சலாம் டீசருடன் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 1:08 PM IST

Rajinikanth in Lal Salaam: ரசிகர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வாழ்த்துக்களை, லால் சலாம் (Lal Salaam) படத்தின் டீசருடன் தெரிவித்துள்ளார்.

Rajinikanth in lal salaam
ரஜினியின் தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளியானது லால் சலாம் படத்தின் டீசர்

சென்னை: உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையானது அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும் திருநாளாகும். இதற்காக மக்கள் அனைவரும் தீபாவளிக்கு முந்தைய நாளில் இருந்தே பலகாரங்கள் செய்தும், தீபாவளி அன்று காலையில் எண்ணெய் வைத்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவார். இது சாதாரணமாகக் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள்.

ஆனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் காலை எழுந்து புத்தாடை அணிந்து கோயிலுக்குச் செல்வது போல, ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு கூடி தலைவரின் தரிசனத்திற்காகக் காத்திருந்து வாழ்த்துக்களைப் பெறுவார்கள். அந்த வகையில் இன்றும், அதிகாலையிலேயே போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரைக் காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தனது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் ரசிகர்களைப் பார்த்து, கையசைத்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதனால், அங்கு கூடியிருந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷம் எழுப்பித் துள்ளிக்குதித்தனர். மேலும், தனது ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் தனது X சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். வரும் பொங்கல் அன்று லால் சலாம் படத்தில் உங்களைச் சந்திக்கிறேன். மொய்தீன் பாய், குதாஃபீஸ் எனக் கூறியுள்ளார். அத்துடன் ரசிகர்களுக்குத் தீபாவளி பரிசாக ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படிப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2024 பொங்கலுக்கு வெளியாகும் எனப் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் மட்டும் சுமார் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், லால் சலாம் படக்குழுவினர் வெளியிட்டுள்ள டீசர் ரசிகர்களின் தீபாவளியைக் கொண்டாட்டமாக்கியுள்ளது.

இதையும் படிங்க: மக்கள் வாழ்வில் தீமை நீங்கி நல் ஒளி பிறக்கட்டும்..! தலைவர்கள் தீபாவளி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.