ETV Bharat / entertainment

Kanguva Glimpse: சூர்யா பிறந்தநாளில் கங்குவா அப்டேட்!

author img

By

Published : Jul 20, 2023, 12:30 PM IST

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக 'கங்குவா' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

kanguva
கங்குவா

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம், கங்குவா. தற்போது இந்திய சினிமாவில் 2023 - 2024ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கங்குவா இருக்கிறது. இப்படத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்த படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர், வீடியோ என இவை அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 'கங்குவா' (kanguva) என்பதன் பொருள் நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்பது ஆகும். இந்த படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் உருவாவதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும், அனைத்து மாநில மக்களையும் இணைக்கும் வகையிலான தலைப்பாக இது வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரலாற்றுப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட 10 மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது, படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படம், அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது. மேலும், இப்படத்தில் சூர்யா பல்வேறு விதமான தோற்றத்தில் நடிக்கிறார் எனவும், இதன் மோஷன் வீடியோவில் அரந்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பெயர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

இதன் இந்தி வெளியீட்டு உரிமை சுமார் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான வருகிற 23ஆம் தேதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதாவது, கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'தி கிங்ஸ் அரைவ்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Samantha: ஈரோடு பண்ணாரி கோயிலில் தரிசனம் செய்த சமந்தா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.