ETV Bharat / entertainment

'வாரிசு' படத்தில் சிம்பு பாடியுள்ளாரா!- புதிய தகவல்

author img

By

Published : Nov 25, 2022, 6:23 PM IST

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்

சென்னை: இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு' (varisu). இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரபு, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

மேலும் தில் ராஜூ தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்கனவே தமன் இசையில் விஜய் மற்றும் மானசி பாடிய ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சிம்புவும் ஒரு பாடல் பாடியுள்ள செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மோதல் - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.