ETV Bharat / entertainment

டின்னருக்கு ரூ.1.5 லட்சம்... வீடியோ காலுக்கு ரூ. 30 ஆயிரம்... கிரண் அதிரடி...

author img

By

Published : Jun 18, 2022, 5:04 PM IST

Updated : Jun 18, 2022, 6:05 PM IST

நடிகை கிரண் தனது பெயரில் ஒரு செயலியை அறிமுகம் செய்து தன்னுடன் டின்னர் சாப்பிடுவதற்கு ரூ.1.5 லட்சம், வீடியோ காலில் உரையாட ரூ. 30 ஆயிரம் என்று அறிவித்துள்ளார்.

பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் சம்பாதிக்கும் பிரபல நடிகை!
பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் சம்பாதிக்கும் பிரபல நடிகை!

சென்னை: ஜெமினி, வின்னர், அன்பே சிவம், வில்லன், முத்தின கத்திரிக்கா, ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை கிரண். திருமலை உள்ளிட்ட சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இவரது கவர்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புக்கள் இல்லாததால், தனது பெயரில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தி கல்லா கட்டிவருகிறார். இந்த செயலியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ரூ.49 கட்டணம் செலுத்த வேண்டும். அதில் கவர்ச்சி படங்கள், வீடியோ உள்ளிட்டவைகளுக்கு தனித்தனி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் சம்பாதிக்கும் பிரபல நடிகை!
கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் சம்பாதிக்கும் பிரபல நடிகை!

அந்த வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பெற ரூ.2 ஆயிரமும், அவருடன் வீடியோ காலில் அரை மணிநேரம் உரையாட ரூ.30 ஆயிரமும், நேரில் சந்தித்து டின்னர் சாப்பிட 1.5 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். இந்த செயலி தீயாய் பரவி வருகிறது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் செய்த படம் 'விக்ரம்' தான்- கமல்ஹாசன்

Last Updated : Jun 18, 2022, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.