ETV Bharat / entertainment

உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த 'டான்'..!

author img

By

Published : May 25, 2022, 4:01 PM IST

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த ’டான்’..!
உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த ’டான்’..!

இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் ‘டான்’. இப்படத்தில், இவருடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது.

கல்லூரி தொடர்பான கதை, தந்தை பாசம் எனப் பல தரப்பட்ட உணர்வுகளை கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தும், ஏற்கெனவே வெளியாகி வெற்றியடைந்த ’டாக்டர்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்த ‘டான்’ படமும் ரூ.100 கோடி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.

உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த ’டான்’..!
உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த ’டான்’..!

இதையும் படிங்க: HBD Karthi : 'விருமன்' முதல் பாடல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.