ETV Bharat / entertainment

இயக்குநர் மிஷ்கினின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?

author img

By

Published : Apr 25, 2023, 1:36 PM IST

என் வாழ்க்கையில் ஶ்ரீ தேவியுடன் ஒரு காட்சியாவது உதவி இயக்குநராக வேலை செய்ய ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறாதா ஆசையாக மாறிவிட்டது என இயக்குநர் மிஷ்கின் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Dienosirs trailer
டைனோசர்ஸ்

சென்னை: "டைனோசர்ஸ்" (dienosirs) என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் மிஷ்கின், ரமணா, நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சம்பந்தம், இயக்குநர் எம்.ஆர்.மாதவன், கதாநாயகன் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவுக்கு கம் பேக் கொடுத்த திருமலை படத்தின் இயக்குநர் ரமணா இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய ரமணா தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு கை விரல்களால் தொண்டையை அழுத்தி பேச முடியாமல் ஹஸ்கி வாய்ஸில் பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது.

மேடையில் பேசிய இயக்குநர் ரமணா, "தொண்டை இல்லாமல் பேசுவதாகவும், கையை எடுத்தால் பேச முடியாது என்றும் கூறியது" அனைவரையும் வருத்தம் அடைய செய்தது.

நடிகர் விஜயகுமார் பேசுகையில், "படத்திற்கு கதை தான் நாயகன். இந்த கதைக்கு நாயகனாக இருக்கும் உதய் கார்த்திக் எங்கள் வீட்டு பிள்ளை. கதையை மக்களுக்கு சொல்லும் விதத்தை வைத்துதான் படம் ஓடுமே தவிர. படங்களில் நடிக்கும் கதாநாயகர்களை வைத்து ஒரு சில படங்கள் ஓடலாம். 4 வாரம் ஹவுஸ்புல் ஆகலாம். ஏன் 50 கோடி, 100 கோடி வசூல் பண்ணியது என சொல்லலாம். ஆனால், நல்ல படங்கள் மக்களுக்கு பிடித்து இருந்தால் நிச்சயமாக ஓடும்" என தெரிவித்தார்.

நடிகர் அருண் விஜய் கூறியது, "நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த படத்திற்கும் ஆதரவு கிடைக்கும்" என்று படக்குழுவை பாராட்டி பேசினார்.

படத்தின் இயக்குநர் எம்.ஆர்.மாதவன் பேசியது, "குழந்தைகளுக்கு அப்பா தான் ஹிரோ. ஆனால் முதல் பட இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர் தான் ஹீரோ என்று தயாரிப்பாளர் பற்றி நெகிழ்ச்சியாக கண் கலங்கி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், சிலர் 10 பேரின் கதையைக் கேட்டு தூங்கிவிட்டேன் என்று சொன்னாரே அது மாதிரி நினைத்துக்கொள்ள வேண்டாம். கடந்த 6 வருடங்களில் 143 தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி உள்ளேன். படம் இயக்கி கூட நான் அவ்வளவு சம்பாதித்தது இல்லை. ஆனால் இது வரை 15 அட்வான்ஸ் வாங்கி உள்ளேன். இந்த படத்திற்கு கூட 7 லட்சம் தான் அட்வான்ஸ் வாங்கினேன். அதே போல் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணிடம் அக்ரிமென்ட் வரைக்கூட போனது. ஆனால் சில காரணங்களால் அது விலகி போனது" என தெரிவித்தார்.

தயாரிப்பாளர் போனி கபூர் கூறியது, "நான் இந்த திரைப்படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். படத்தின் நாயகன் உதய் கார்த்திக் என்னுடைய மருமகன் (nephew). இவர் நன்றாக நடிக்கிறார், நன்றாக காமெடி செய்கிறார். ரொமாண்டிக் சீனிலும் கூட நன்றாக நடித்துள்ளார். அது மட்டும் அல்ல கார்த்திக் ஒரு good kisser. படத்தில் கதாநாயகியை தவிர ஒரு வயதான பெண்மணிக்கும் நடிகர் கார்த்திக் முத்தம் கொடுத்தார். அந்த வயதான பெண்ணும் அவரது முத்தத்தை ரசித்தார்" என்று ஹியூமராக போனி கபூர் பேச அரங்கமே அதிர சிரிப்பலை ஏற்பட்டது.

இயக்குநர் மிஷ்கின் பேசியது, "இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மாதிரி இருக்கிறது. சினிமா நிகழ்ச்சி மாதிரி இல்லை. பொறாமையே இல்லை இங்கு. உண்மையிலேயே ஒரு சினிமா நிகழ்ச்சி என்றால் பெரிய என ஆவேசமடைந்த மிஷ்கின் ஒருமையில் பேசினார். இந்த படத்தின் தயாரிப்பாளர் முதல் அனைவரும் உறுதியாக பேசினார்கள்.

கொஞ்சம் பணத்தை போட்டு கொஞ்சம் பணத்தை எடுக்கும் தொழில் சினிமா கிடையாது. தயாரிப்பாளர் உறுதியாக உள்ளார். அதனால் அவர் சினிமாவில் தான் இருப்பார் என்றார். 2 நாட்களுக்கு முன்பு நான் என் அடுத்த படத்திற்கு கதை எழுதிக்கொண்டு இருந்தேன். அப்போது இந்த படக்குழு என்னை பார்க்க வந்தது. அந்த சமயம், இந்த பட இயக்குநரின் முகத்தை பார்த்தேன்.

நிறைய சிகரெட் புகைப்பவர் போல் இருந்தது. அப்போவே தெரியும் படம் ஹிட் என்று. ஏன் என்றால், நான் முதல் படம் எடுக்கும் பொழுது ஒரு நாளைக்கு 100 சிகரெட் அடித்தேன். 5 வது படத்திற்கு எல்லாம் 120 சிகெரெட் அடித்தேன். இந்த tension இருந்தால் தான் இருக்குனர். அந்த வகையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

டைனோசர்ஸ் ரொம்ப வித்தியாசமான தலைப்பு. அதற்கு கீழ் உள்ள subtitle கொஞ்சம் மோசமாக இருந்தது. Die No sirs இது எனக்கு புரியவே இல்லை. ஆனால் பரவாயில்லை. நமக்கு தாணு என்றால் தெரியும். ஆனால் போனி கபூர் தெரியாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஶ்ரீ தேவி ஒரு மிக சிறந்த நடிகை. மூன்றாம் பிறை படத்தில் ஒரு காட்சி இருக்கும். கமலுடன் ஶ்ரீ தேவி நடித்தது. ஶ்ரீ தேவி உடன் ஒரு காட்சியாவது குறைந்த பட்சம் உதவி இயக்குநராக வேலை செய்ய ஆசைப்பட்டேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் தவற விட்ட மிகப்பெரிய வாய்ப்பு அது என மிகவும் வருத்தத்துடன் பேசினார்.

பின்னர், ஒரு பெரிய ஸ்டார் போல தான் ரமணா இங்கு வந்தார். விஜய் உடன் எல்லாம் வேலை செய்துள்ளார். அவர் மேனேஜ் செய்து தான் பேசினார். கண்டிப்பாக அவர் படம் பெரிய வெற்றி அடையும். இயக்குநர் பேசும் போது நான் கலை படம் பண்ண வரவில்லை, கலாய் படம் தான் பண்ண வந்துள்ளேன் என்றேன். அது தவறு. கலை படமும் பண்ண வேண்டும் என்றார்.

வெற்றிமாறன் அடுத்து தூள் கிளப்புவார். அவர் கலாய்க்கும் படம் பண்ணுவதில்லை கலை படம் பண்ணுகிறார். ஆனால் அதில் கலாய்க்கிற விஷயம் நிறைய இருக்கும். சினிமாவிற்கு என் பாலா மீண்டும் வர வேண்டும். இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர். பாலா இன்னும் 40 ஆண்டுகள் படம் கொடுத்து கொண்டே இருப்பார். மகா கலைஞன் பாலா" என இயக்குநர் மிஸ்கின் கூறினார்.

இதையும் படிங்க: "வாழ்க்கைல வேணும் டாஸ்க்.. சேஃப்டிக்கு போடுங்க மாஸ்க்" - வேலூரில் பஞ்ச் பேசிய டி.ஆர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.