ETV Bharat / entertainment

இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண வந்த அனுஷ்கா ஷர்மா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 1:42 PM IST

anushka sharma: இன்று நடைபெறும் உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண நடிகையும், இந்திய வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா வரவுள்ளார்

அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா ஷர்மா

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மொத்தம் 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உடனான போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருப்பர். அதுவும் உலகக் கோப்பை போட்டி என்றால் எதிர்பார்ப்பு விண்ணைத் தொடும் அளவுக்கு இருக்கும். இரு அணிகளும் சம பலத்துடன் காட்சி அளிப்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண நடிகையும், இந்திய வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா வரவுள்ளார். முன்னதாக அகமதாபாத் வந்த அனுஷ்கா ஷர்மா, சச்சின் டெண்டுல்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அனுஷ்கா சர்மா, பொதுவாக இந்தியா விளையாடும் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் அனுஷ்கா சர்மா தற்போது முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் சுயசரிதையில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு Chakda Xpress என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ப்ரோசித் ராய் இயக்குகிறார். இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதையும் படிங்க: முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. லோகேஷ் வைத்த ட்விஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.