ETV Bharat / entertainment

'பெற்றோரைக் கொண்டாடுங்கள்' - டான் படம் பார்த்துவிட்டு ராமதாஸ் உருக்கம்

author img

By

Published : Jun 15, 2022, 8:52 PM IST

'அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம்' என 'டான்' படத்தைப் பாராட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெற்றோரைக் கொண்டாடுங்கள் டான் படம் பார்த்துவிட்டு ராமதாஸ் உருக்கம்
பெற்றோரைக் கொண்டாடுங்கள் டான் படம் பார்த்துவிட்டு ராமதாஸ் உருக்கம்

இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் 'டான்'. இப்படத்தில், இவருடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியானது. இதன் பின்னர் ஜூன் 10ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 'டான்' திரைப்படத்தைப் பாராட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், 'அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம்' என ட்வீட் செய்துள்ளார்.

  • நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!@Siva_Kartikeyan @Dir_Cibi #Don

    — Dr S RAMADOSS (@drramadoss) June 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் பார்த்தேன். பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தைச் சொல்லும் அந்தத் திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் & வடிவேலு நடிக்கும் சந்திரமுகி - 2..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.