ETV Bharat / entertainment

சென்னையில் தொடர் படப்பிடிப்புகளால் மகிழ்ச்சியான பெப்சி தொழிலாளர்கள்

author img

By

Published : Aug 24, 2022, 8:21 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பெப்ஸி தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் தொடர் படப்பிடிப்புகளால் பிஸியான பெப்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் தொடர் படப்பிடிப்புகளால் பிஸியான பெப்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: ரஜினி நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டர் அருகே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பனையூரிலும் செட் அமைத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதேபோல கமல், ஷங்கர் கூட்டணியின் 'இந்தியன் 2' ஷூட்டிங்கும் மீண்டும் இன்று சென்னையில் தொடங்கியது.

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகம் அருகே உள்ள ஒரு பழைமைவாய்ந்த கட்டடத்தில் 'இந்தியன்2' ஷூட் பூஜையுடன் தொடங்கியது. பாபி சிம்ஹா சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். வருகிற 2ஆம் தேதிதான் அவர் சென்னை வருகிறார். அதன்பின், படப்பிடிப்பில் பங்கேற்கிறார் என்று தெரிகிறது.

மேலும் இயக்குநர் அட்லீ, ஷாரூக்கான் காம்போவின் 'ஜவான்' படப்பிடிப்பு சென்னையில் உள்ள பனையூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷாரூக்கானின் போர்ஷன்கள் சென்னையில் தொடர்ந்து இருபது நாள்கள் எடுக்கப்படுகின்றன. படப்பிடிப்பு அரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே விஜய்யின் 'வாரிசு' படத்தின் அடுத்த ஷெட்யூல் மீண்டும் சென்னையில் நடக்க உள்ளது. ஆந்திராவில் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து படப்பிடிப்புகளும் சென்னையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இப்படி டாப் ஹீரோக்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நடப்பதால் பெப்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க:அந்நியன் போன்று பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்தது ’கோப்ரா’ திரைப்படம்... நடிகர் விக்ரம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.