ETV Bharat / entertainment

மொபைல் திரையரங்கில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘பெஸ்டீ'

author img

By

Published : Jul 12, 2022, 1:06 PM IST

மூவி டு மொபைல் (MTM) என்ற பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பெஸ்டீ' இத்திரைப்படம் வரும் ஜூலை 13 அன்று அலைபேசியில் நேரடியாக பிரத்யேக செயலி மூலம் வெளியாகிறது

மொபைல் திரையரங்கில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘பெஸ்டீ'
மொபைல் திரையரங்கில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘பெஸ்டீ'

சென்னை: இதுவரை திரைப்படங்கள் திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் தற்போது OTT தளங்களிலும் வந்து கொண்டும் இருக்கிறது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உள்ளங்கையில் உள்ள அலைபேசியை திரையரங்குகளாக மாற்றி தமிழ் திரையுல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திரைப்படங்களை மக்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுள்ளது.

இதன் முதல்படியாக மூவி டு மொபைல் (MTM) என்ற பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பெஸ்டீ'. யாஷிகா ஆனந்த், அசோக், சத்யன், சேஷு, வாவிக்ரம், மாறன், அம்பானி சங்கர், பயில்வான் ரங்கநாதன், ஆகியோர் நடித்துள்ள திரைப்படத்தை ரங்கா இயக்கி சாரதிராஜா தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஜூலை 13 அன்று அலைபேசியில் நேரடியாக ரூ.30 டிக்கெட்டில் மக்கள் படத்தை பார்க்கலாம். அதற்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என். ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சௌந்தரபாண்டியன், என்.விஜயமுரளி, விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் இமான் அண்ணாச்சி, MTM இயக்குனர்கள் விஜயசேகரன், தயானந்தன், உட்பட ஏராளமான தயாரிப்பாளர்களும் திரையுலகை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.

மாதம் தோறும் இரண்டு திரைப்படங்கள் மொபைல் திரையரங்கில் பார்க்கலாம் என மேடையில் பேசியவர்கள் கூறினார்கள்.

இதையும் படிங்க: ”கோப்ரா” இசை வெளியீட்டு விழாவில் விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.