ETV Bharat / entertainment

பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - முஸ்லீம் லீக் வலியுறுத்தல்!

author img

By

Published : Apr 6, 2022, 7:36 AM IST

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதால் அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - முஸ்லீம் லீக் வலியுறுத்தல்!
பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - முஸ்லீம் லீக் வலியுறுத்தல்!

இதுகுறித்து நிறுவன தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ம் தேதி, ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாக கொண்டு, இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர்.

தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்கள் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம்பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புக்களை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதை பார்த்து வருகிறோம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - முஸ்லீம் லீக் வலியுறுத்தல்!
பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - முஸ்லீம் லீக் வலியுறுத்தல்!

2015 பெருவெள்ளத்தின் இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிகளை யாரும் மறந்துவிட முடியாது. கரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்வை சேர்ந்தவர்கள். இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது.

உண்மை நிலை இப்படி இருக்க பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாத நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழலில், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளிவருகிறது. எனவே அந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, பீட்ஸ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கிராமி விருது விழாவில் மகனுடன் ஏஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.