ETV Bharat / entertainment

நடிகர் மெல் கிப்சனின் தாக்கம் என் படைப்புகளில் பிரதிபலிக்கிறது - இயக்குநர் ராஜமெளலி

author img

By

Published : Sep 15, 2022, 6:31 PM IST

தெலுங்குத் திரையுலகம் ஆந்திரா, தெலங்கானா, இந்தியாவைத் தாண்டி உலக அளவில் வளர்ந்துள்ளது என்று எஸ்.எஸ்.ராஜமௌலி கனடா டொரொண்டோ திரைப்பட விழாவில் பேசுகையில் கூறினார்.

Etv Bharatநடிகர் மெல் கிப்சனின் தாக்கம் என் படைப்புகளில் பிரதிபலிக்கிறது- இயக்குநர் ராஜமெளலி
Etv Bharatநடிகர் மெல் கிப்சனின் தாக்கம் என் படைப்புகளில் பிரதிபலிக்கிறது- இயக்குநர் ராஜமெளலி

டொரண்டோ : இந்திய அளவில் வெளியாகி மாபெரும் பிளாக் பஸ்டரான பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களின் இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் மிகவும் பிரமாண்டமாகத் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவின் டொரொண்டோ நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி கூறியதாவது, தனது படங்களில் விஷுவல் எஃபெக்ட்களைப் பயன்படுத்துவதில் நாட்டம் இருப்பதாகவும், அவரது தனிப்பட்ட நுட்பம் மூலம் படத்தின் கதையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், முக்கியமான தருணங்களில் உணர்ச்சிகரமான தாக்கத்தையும் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த முயல்வதாகவும் கூறினார்.

தனது 'பாகுபலி' இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது எப்படி என்பதைப் பற்றிப் பேசிய ராஜமௌலி, வரைமுறைகளைத் தாண்டி படம் எடுப்பதற்கு ரிஸ்க் எடுத்ததால் அது நல்ல விளைவுகளை தந்ததாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் கதை சொல்லும் ஒரு பெரிய வரலாறு உள்ளது, இந்தியர்கள் எல்லாவற்றையும் கதைகளாக சொல்லும் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். நமது ஆழமான தத்துவங்கள் கூட கதைகளில் சொல்லப்பட்டவையே.

நமது மிகப்பெரிய இதிகாசங்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றைப் பார்த்து வளர்ந்தேன். உண்மையில், வேறு எந்த இந்தியத் திரைப்படத் துறையையும் விட தெலுங்குத் திரையுலகம் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தைப் பற்றிய அதிகப் படங்களைத் தயாரித்துள்ளது. மேலும் எனது சிறுவயதிலிருந்தே நான் அதை விரும்பினேன்.

அதே இதிகாச கதைகளை அதிரடியுடன் எடுத்து, அவற்றை திரையில் மொழிபெயர்த்தால், தெலுங்குத் திரையுலகம் அதன் எல்லைகளைத் தாண்டி செல்ல முடியும் என்ற எண்ணத்தில் தான் படங்களை பிரமண்டமாக எடுக்கத் தொடங்கினேன். அப்படித்தான் தெலுங்குத் திரையுலகம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் இந்தியாவைத் தாண்டி உலக அளவில் வளர்ந்துள்ளது' என்று அவர் கூறினார்.

நடிகர் மெல் கிப்சனின் தாக்கம்: "எனக்கு சிறுவயதிலிருந்தே ஆக்‌ஷன் மீது நாட்டம் இருந்தது. ஆக்‌ஷன் படங்களைப் பார்க்கத் தொடங்கியபோது பல தருணங்கள் என் நினைவுகளில் ஒட்டிக்கொண்டது. நடிகர் மெல் கிப்சனின் படங்கள் எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது நடிப்பு எல்லைகளையும், வரைமுறைகளையும் கடந்தது’’ எனக் கூறினார்.

இதையும் படிங்க:வழுக்கை தின கொண்டாட்ட செல்ஃபியைப் பகிர்ந்த ஜடா பிங்கெட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.