ETV Bharat / entertainment

SK23: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!!... கம்பேக் கொடுப்பாரா முருகதாஸ்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:47 PM IST

இன்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தை முருகதாஸ் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்தில் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ரசிகர்களால் எஸ்கே(SK), ப்ரின்ஸ் என அழைக்கப்படும் சிவகார்த்திகேயனின் சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும் விஜய், அஜித்திற்கு பிறகு நிலையான மார்க்கெட்டை கொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த மாவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராணுவ வீரன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்பட வெளியீடு தள்ளிப்போகும் நிலையில் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இன்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது 23வது படத்தை முருகதாஸ் இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

  • Dear @ARMurugadoss sir,

    Wishing you a very happy birthday sir 😊👍

    Sir I’m extremely delighted to join with you for my 23rd film and I'm double delighted after listening to your narration. This film is going to be very special for me in all aspects and I can’t wait to start… pic.twitter.com/XiOye1GmuL

    — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அதற்கு பின் முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அவரது சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: Etv Bharat Exclusive : பாடகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் - எஸ்பிபி குறித்து இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.