ETV Bharat / entertainment

"தவறு செய்வது மனிதம்.. மன்னிப்பது தெய்வீகம்" - நடிகை த்ரிஷா ட்வீட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 5:41 PM IST

நடிகை த்ரிஷாவை பற்றி தவறாக பேசியதாக எழுந்த சர்ச்சையில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் "தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வீகம்" என பதிவிட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் மன்னிப்பை ஏற்றாரா த்ரிஷா
மன்சூர் அலிகான் மன்னிப்பை ஏற்றாரா த்ரிஷா

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மத்திரிக்கையாளர் சந்திப்பில் லியோ படத்தில் நடிகை த்ரிஷாவுடன் நடித்தது குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது. இதனையடுத்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து “மன்சூர் அலிகான் பெண்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார்.

  • To err is human,to forgive is divine🙏🏻

    — Trish (@trishtrashers) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இனி அவருடன் சேர்ந்து நடிக்கமாட்டேன். இதுவரை நடிக்காததை நினைத்து நிம்மதி அடைகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பாடகி சின்மயி, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.

ஆனால் தான் எதுவும் தவறாக பேசவில்லை என மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

இதனை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவாகி உள்ளார் என தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டார். பின்னர் நேற்று (நவ. 23) மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு" என கூறியுள்ளார். இதனையடுத்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைதல பக்கத்தில் "தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வ குணம்" என பதிவிட்டு உள்ளார். த்ரிஷாவின் இந்தப் பதிவு மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதற்கான அர்த்தமா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய சீனு ராமசாமி.. பதிலடி கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.