ETV Bharat / entertainment

வெளியானது 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக்; விஜய் பிறந்தநாளுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!!

author img

By

Published : Jun 22, 2022, 11:57 AM IST

Updated : Jun 22, 2022, 12:40 PM IST

விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது

வெளியானது 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக்; விஜய் பிறந்தநாளுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!!
வெளியானது 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக்; விஜய் பிறந்தநாளுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!!

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு 'வாரிசு' என தலைப்பு வைத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று 'வாரிசு' திரைப்படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

'வாரிசு' திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பிண்ணனி கொண்ட திரைக்கதையில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இன்று மாலை 17:02 மணிக்கு அப்படத்தின் ’3rd லுக்’ வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் விருந்தாக இப்படம் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளான இன்று அவரது திரைப்பட அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பல "வாரிசு"களுக்கு மத்தியில் நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய்!

Last Updated :Jun 22, 2022, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.