ETV Bharat / entertainment

”பீஸ்ட்” படத்தில் லாஜிக் இல்லை என கலாய்த்த விவகாரம்: மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்

author img

By

Published : Jul 12, 2022, 6:33 PM IST

'பீஸ்ட்' படத்தின் காட்சிகளில் லாஜிக் இல்லை என கூறிய மலையாள நடிகரான ஷைன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

”பீஸ்ட்” படத்தில் லாஜிக் இல்லையென கலாய்த்த விவகாரம்: மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்
”பீஸ்ட்” படத்தில் லாஜிக் இல்லையென கலாய்த்த விவகாரம்: மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படம் ஓடிடி தளத்தில் வெளியான பின்னர் சமூக வலைதளங்களில் படத்தின் லாஜிக் குறித்து நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் பயங்கரவாதிகளுள் ஒருவராக வருபவர் 'கம்மட்டிபாடம், குருதி, இஷ்க்' போன்ற பல மலையாள படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ.

இவர் கடந்த மாதம் ஒரு மலையாள யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'பீஸ்ட்' படத்தின் காட்சிகளில் லாஜிக் இல்லை என கூறினார், இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் அவர் பேசியது தவறு என்றும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ இன்ஸ்டாகிராமில் விஜய் ரசிகர் பக்கம் ஒன்றில், ”நான் மீடியாவில் அவ்வாறு பேசியது என் தவறு தான், சாரி நண்பா” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர் ஒருவர் ஏன் ரசிகர் பக்கத்தில் வந்து மன்னிப்பு கேட்கிறீர்கள் என கேட்டதற்கு, நாம் யாரைப்பற்றியோ அல்லது எதைப்பற்றியோ தவறாக பேசினால் அது அவர்களை அல்லது அதனை விரும்புவோருக்கு பெரும் வலியை கொடுக்கும்”, என கூறியுள்ளார். ஷைன் டாம் சாக்கோவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: பீஸ்ட்டை கலாய்த்த மலையாள நடிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.