ETV Bharat / crime

சென்னையில் தொடரும் தொழிலதிபர்கள் கடத்தல்: பெண் வெளியிட்ட வைரல் காணொலி

author img

By

Published : Dec 3, 2021, 12:30 PM IST

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட அதே கும்பல் மற்றொரு தொழிலதிபரையும் கடத்தி சொத்துகளை அபகரித்ததாகப் பாதிக்கப்பட்டவரின் மனைவி பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுவருகிறது.

Chennai business man kidnap case, chennai business man venkateshan, CBCID Enquiry in chennai business man Rajesh kidnapped case,
பண்ணை வீட்டில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தொழிலதிபர் வெங்கடேஷன்

சென்னை: அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ், அவரது குடும்பத்தினர் ஆகியோரை 2019ஆம் ஆண்டு ஒரு கும்பல் கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து சொத்துகளை அபகரித்ததாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் காவல் துறையினருக்கும் தொடர்பிருந்ததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

மேலும், தொழிலதிபரைக் கடத்தியதாக திருமங்கலம் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், கோடம்பாக்கம் ஸ்ரீ, சிவா, ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணா பிரசாத் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இருவர் கைது

இந்த வழக்கில் தொடர்புடைய கோடம்பாக்கம் ஸ்ரீ, கடத்தலுக்குத் துணைபோனதாக வேங்கட சிவநாதகுமார் ஆகிய இருவரை சிபிசிஐடி காவலர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்துவரக்கூடிய காவல் துறையினர் உள்பட ஒன்பது பேரை சிபிசிஐடி காவலர்கள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில், தொழிலதிபர் ராஜேஷை கடத்திச் சொத்துகளை அபகரித்த அதே கும்பல் தனது கணவரான தொழிலதிபர் வெங்கடேசனையும் கடத்தி சொத்துகளை அபகரித்ததாக வெங்கடேசனின் மனைவி கோமதி பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தொழிலதிபர் கோமதி வெளியிட்ட காணொலி

பெண் காணொலியால் பரபரப்பு

அந்தக் காணொலியில், "எனது கணவருக்கு தொழில்ரீதியாகப் பழக்கமானவர் சிவா, தொழில் கூட்டாளியாக இருந்த சிவாவிடமிருந்து கணவர் வெங்கடேசன் பல கோடி ரூபாய் வரை கடன் பெற்றார். பின்னர் திடீரென சிவா கடனை உடனடியாகத் தர வேண்டும் எனக் கூறியதால் அலுவலகத்தை விற்று பாதி பணத்தை கொடுத்தார்.

ஆனால் மீதமுள்ள பணத்தை உடனடியாகத் தர வேண்டும் எனத் தெரிவித்ததால் தர முடியாமல் தவித்தபோது, சிபிஐ பேசுவதாகக் கூறி ஆந்திராவிற்கு உடனடியாக வர வேண்டும் என சிவா, தொழிலதிபர் ஸ்ரீனிவாசராவ் ஆகியோர் எனது கணவர் வெங்கடேசனை அழைத்தனர். அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் ஸ்ரீனிவாசராவ், சிலர் எனது வீட்டிற்கு வந்து தங்கி பணம் கேட்டு மிரட்டி, எனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

Chennai business man kidnap case, chennai business man venkateshan, CBCID Enquiry in chennai business man Rajesh kidnapped case,
தொழிலதிபர் வெங்கடேசன்

எனது கணவர் வெங்கடேசனை சோழவரம் வீட்டில் அடைத்து பணம் கேட்டு துன்புறுத்தி திருமுல்லைவாயிலில் உள்ள வீடு, நகைகள் உள்பட சுமார் ஒன்றரை கோடி சொத்துகளை அபகரித்துவிட்டனர். அப்போது, வெங்கடேசனின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, தொழிலதிபர் ராஜேஷிற்குத் தாங்கள் அவருக்குச் செலுத்திய கடன் தொகையைத் தவறாக எண்ணி அந்தக் கும்பல் ராஜேஷை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்துவைத்து சொத்தை அபகரித்தது.

சிசிடிவி காட்சிகள் வெளியீடு

காவல் துறை ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் அலுவலகத்திற்கு வெங்கடேசன், ராஜேஷ் ஆகியோர் சென்றபோது ஸ்ரீனிவாசராவ், சிவா ஆகியோர் முன்னிலையில் மூன்று மாதங்களுக்குள் பணம் தர வேண்டும் இல்லையென்றால் சொத்தை எழுதித் தர வேண்டும் என ஐபிஎஸ் அலுவலர் மிரட்டினார். தங்களை மிரட்டிய கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Chennai business man kidnap case, chennai business man venkateshan, CBCID Enquiry in chennai business man Rajesh kidnapped case
பண்ணை வீட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தொழிலதிபர் வெங்கடேசன்

காவலர்களுடன் ஒரு ரவுடி கும்பல் வெங்கடேசனின் வீட்டில் வந்து மிரட்டுவது போன்ற சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷ் கடத்தல் வழக்கில் மற்றுமொரு திருப்பமாக இன்னொரு தொழிலதிபர் அந்தக் கும்பலால் கடத்தப்பட்டு சொத்தை இழந்திருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காவலர் வங்கிக் கணக்கில் மோசடி: சைபர் கிரைம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.