ETV Bharat / city

எஸ்பி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ தம்பதி

author img

By

Published : May 20, 2022, 8:05 AM IST

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மருத்துவ தம்பதி குடும்பத்தினருடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

எஸ்பி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ தம்பதி
எஸ்பி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ தம்பதி

தூத்துக்குடி: கீழஈரால் அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆனந்த் மற்றும் வனிதா தம்பதி தங்களது 5 வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து மருத்துவர் வனிதா கூறுகையில்,

எனது கணவர் மருத்துவர். ஆனந்தும் நானும் கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம், என்னை ஜாதி ரீதியாகவும் பெண் என்பதாலும் என்னிடம் எதையும் வெளிக்காட்ட முடியாததால், எனது கணவரை கடுமையான துன்புறுத்தலுக்கு கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் இருவரும் சேர்ந்து தங்களை தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர், என கூறினார்.

இதுகுறித்து மருத்துவர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் 2017 இல் இருந்து கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவராக பணியாற்றி வருவகிரேன். கண்காணிப்பாளர் ராஜா தூண்டுதலின்பேரில் கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குநர் போஸ்கோ ராஜா தனக்கு தொடர்ந்து தேவையில்லாத மெமோ கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து மருத்துவ துறை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நியாயம் கிடைக்காததால் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டனர், என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மனு அளித்தனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இதையும் படிங்க: பெண் துன்புறுத்தல்: எஸ்ஐ, 3 காவலர்கள் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.