ETV Bharat / city

கை ஓங்குமா? இலை துளிர்க்குமா? பெரும் எதிர்பார்ப்பில் நாங்குநேரி!

author img

By

Published : Oct 23, 2019, 8:29 PM IST

Updated : Oct 23, 2019, 9:24 PM IST

நெல்லை: இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ், அதிமுக இடையே ஏற்பட்டுள்ளது.

Nanguneri ByElection Tomorrow Result

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி அக்டோபர் 21ஆம் தேதியன்று அத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மொத்தம் 66.35 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

299 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் காவல் துறையினரின் பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்த அறை முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

மேலும் துணை பாதுகாப்புப் படையினர் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். நாங்குநேரி தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை நாளை காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது.

மொத்தம் 22 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேசைகள் போடப்பட்டுள்ளன. நேரடியாக தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடம்
அதிமுக, காங்கிரஸ் நேரடியாக மோதும் இந்தத் தொகுதியில் கடந்த மாதம் முழுவதும் இவ்விரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு 80 விழுக்காடு வரை இருக்கும் என்று அரசியல் தலைவர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 66.35 விழுக்காட்டினரே வாக்களித்துள்ளனர்.

இதனால் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிமுக, திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே அதிகரித்துள்ளது. கை ஓங்குமா? இலை துளிருமா? என நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பேன் - வசந்தகுமார்

Intro:நாங்குநேரி தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை. அதிமுக, காங்கிரஸ் இடையே பெருகும் எதிர்பார்ப்பு.
Body:நாங்குநேரி தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை. அதிமுக, காங்கிரஸ் இடையே பெருகும் எதிர்பார்ப்பு.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது அதனைத் தொடர்ந்து 21.10.19 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மொத்தம் 66.35 சதவீத வாக்குகள் பதிவாகியது. 299 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் காவல்துறை பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்குபெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்த அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் துணை இராணுவப் படையினர் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர் 24 மணி நேரமும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

நாங்குநேரி தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 22 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. நேரடியாக தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் வாக்கு நிலவரங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு.

அதிமுக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் இந்த தொகுதியில் கடந்த மாதம் முழுவதும் இவ்விரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பான அரசியல் களத்தில் மக்கள் வாக்குப்பதிவு 80 சதவீதம் வரை இருக்கும் என்று அரசியல் தலைவர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 66.35 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனால் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிமுக மற்றும் திமுக கூட்டணி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே அதிகரித்துள்ளது. Conclusion:
Last Updated : Oct 23, 2019, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.