ETV Bharat / city

கழிவுகளை வெளியேற்ற ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Sep 14, 2021, 8:38 AM IST

கரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டபோது உருவான கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

sterlite-raw-material-case-postponement
கழிவுகளை வெளியேற்ற ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இருக்கும் வேதாந்த ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது.

மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், வேதாந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசாணை 72ன் படி நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது.

நிறுவனத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதன் விளைவாக அவசரகால நிலையை கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம், ஆபத்தான பல மூலப் பொருள்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்த நிலையில் அவையும் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து நிறுவனத்தின் உள்ளே உள்ள ஆபத்தான மூலப்பொருள்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை எண் 83ன் படி உள்ளூர் உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையின் போது 7,833 மெட்ரிக் கியூப் கேஸ் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர்.

தற்போது, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணையை வெளியேற்றவும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர் மட்டக்குழு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க கூடுதலாக 2 வார கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை 1 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.