ETV Bharat / city

ஜல்லிக்கட்டு காளைகளை அழிக்க முயற்சி - முகிலன் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 19, 2019, 6:27 PM IST

மதுரை: ஜல்லிக்கட்டு காளைகளை அழிக்க முயற்சி நடப்பதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார்.

சமூக போராளி முகிலன்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மெரினாவில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட குற்றவியல் 2ஆவது நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னதாக வழக்கு ஒன்றில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகிலன், பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதையடுத்து வழக்கை வரும் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலன்
இதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், “இந்தி திணிப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம். கால்நடை இனப்பெருக்கக் சட்டத்தை கொண்டுவந்து ஜல்லிக்கட்டு காளைகளை அழிக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்தச் சட்டத்தை இந்தியாவை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாடு அரசு தட்டிக்கேட்க மறுக்கிறது. எனவே எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும்.

மத்திய கால்நடை இனவிருத்தி சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுகளுக்கு எதிராக போராடினால் கைது என்ற கொலைகார அரசாக இந்த அரசு செயல்படுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க...

காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான யானைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

Intro:ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர். அடுத்தகட்ட விசாரணை அக்16க்கு ஒத்திவைப்புBody:ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர். அடுத்தகட்ட விசாரணை அக்16க்கு ஒத்திவைப்பு.

அமித்ஷா தமிழகத்திற்கு வந்தால் எதிர்ப்போம், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் , அரசுக்கு எதிராக போராடினால் கைது என்பதை போன்ற கொலைகார அரசாக செயல்படுகிறது, கால்நடை இனப்பெருக்க சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முகிலன் பேட்டி.

ஜல்லிக்கட்டு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 64பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கில் இன்று மதுரை மாவட்ட குற்றவியல் 2வது நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக வழக்க ஒன்றில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெறறதையடுத்து வழக்கை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது்

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் : ஹிந்தி திணிப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம், கால்நடை இனப்பெருக்க சட்டத்தை கொண்டுவந்து ஜல்லிக்கட்டு காளைகளை அழிக்கும் முயற்சி, எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும், கால்நடை இனப்பெருக்க சட்டம் இந்தியாவை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது, மத்திய அரசின் மக்கள்விரோத திட்டங்களை தமிழக தட்டி கேட்க மறுக்கிறது, மத்திய கால்நடை இனவிருத்தி சட்டம்2019 தை ரத்து செய்ய வேண்டும் எனவும், அரசுகளுக்கு எதிராக போராடினால் கைது என்ற கொலைகார அரசாக செயல்படுகிறது எனவும் , 7தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.