ETV Bharat / city

மதுரை பெரியார் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - நகராட்சி நிர்வாக இயக்குநர் பேட்டி

author img

By

Published : Nov 20, 2021, 6:58 PM IST

மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனப் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்,

நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

மதுரை: மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், குன்னத்தூர் சத்திரம், வைகை ஆற்றை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

இந்த ஆய்வின் போது 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் மற்றும் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் 57 பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து மேலவாசல் பகுதியில் கட்டப்படும் முல்லைப்பெரியாறு குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளை ஆய்வுச் செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் நகர பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பெரியார் பேருந்து நிலைய பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்து உள்ளன. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு பெரியார் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட உள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி பெரியார் பேருந்து நிலைய பணிகள் நடைபெறுகின்றன. பேருந்து நிலைய பணிகளில் எந்த மாற்றமும் இல்லை. நான்கு அல்லது ஐந்து மாதங்களில் முழுமையாக பணிகள் நிறைவடையும். மதுரை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன.

நகராட்சி நிர்வாக இயக்குநர் பேட்டி

கால்நடைகள் சாலைகளில் திரிவதை கட்டுப்படுத்த அந்தந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகர் பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் வண்ணம் 328 சாலைகளுக்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளன." என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.