ETV Bharat / city

முடங்கி வாழ்வதற்காகப் பிறக்கவில்லை: திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட சிங்கப்பெண்!

author img

By

Published : Dec 14, 2019, 10:57 PM IST

மதுரை: திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த பெண்மணி தன்னம்பிக்கையுடன் சிகிச்சைப்பெற்று மீண்டும் தான் இழந்த அழகிய தோற்றத்தை பெற்றுள்ளார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்

சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் பெண்ணின் மீது ஒருதலையாக காதலித்த இளைஞர் திராவகம் வீசும் நிகழ்வும் இதனால் பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து வெளிவந்து தனது கனவுகளை நோக்கி பயணப்படும் ஒரு காட்சி இருக்கும். எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்த இந்தக் காட்சி திரையில் மட்டமல்லாது நிஜ வாழ்க்கையிலும் நடக்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்கிறார் நேபாளத்தைச் சேர்ந்த பிந்தபசினி கன்சக்கர் (Bindabasini kansakar).

நேபாள் ஹெட்டாடா பகுதியைச் சேர்ந்தவர்கள் மது கன்சக்கர், பைதேஹி கன்சக்கர் தம்பதி. இவருடைய மகள்தான் பிந்தபசினி கன்சக்கர். இவர் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த திலீப் ராஜ் கேசரி என்ற இளைஞர் பிந்தபசினியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பிந்தபசினியை பலமுறை தொந்தரவு செய்த திலீப் சிறிது நாள்களுக்கு பிறகு அவரது முகத்தில் திராவகம் வீசியுள்ளார்.

திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரும்
இதனால் முகம் முழுவதும் வெந்துபோன அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பிறகு பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார். பின்னர் அவர் தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்தார்.

திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட சராசரி பெண்களைப்போல முடங்கிக் கிடக்காமல் பிற பெண்களைப் போல தனது வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அவருக்குள் ஏற்பட்ட உத்வேகம்தான் தற்போது கல்லூரி படிப்பையும் தொடரவைத்தது.

இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் தனக்கு ஏற்பட்ட இந்த விபத்திலிருந்து தான் மீண்டு வருவதற்காக சிகிச்சையையும் மேற்கொண்டுவருகிறார். இதற்காக மதுரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆறு ஆண்டுகளாக, சிகிச்சை மேற்கொண்டு தான் இழந்த அழகிய தோற்றத்தை தற்போது மீண்டும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:

படித்தது இளங்கலை! பிடித்தது இளங்காளை!

Intro:*ஆசிட்டால் தாக்கப்பட்டு புறத்தின் அழகை இழந்தாலும் அக வலிமையோடும் வாழ்வில் முன்னேறி வரும் பெண் ! நேபாளத்தின் உண்மையான சிங்கப் பெண்*Body:*ஆசிட்டால் தாக்கப்பட்டு புறத்தின் அழகை இழந்தாலும் அக வலிமையோடும் வாழ்வில் முன்னேறி வரும் பெண் ! நேபாளத்தின் உண்மையான சிங்கப் பெண்*




பிகில் படத்தில் தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் பெண்ணின் மீது காதலித்த இளைஞர் ஆசிட் அடிக்கும் நிகழ்வும் ஆசிட் அடித்து பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து வெளிவந்து தனது கனவுகளை நோக்கி பயணப்படுமாறும் ஒரு காட்சி இருக்கும் அது திரையில் மட்டும் நடக்காது நிஜ வாழ்க்கையிலும் நடக்கும் என்பதற்கு ஒரு சான்றாக நேபாளத்தைச் சேர்ந்த Bindabasini kansakar என்ற பெண்மணி உள்ளார்.


நேபால் ஹெட்டாடா பகுதியை சேர்ந்த Madhu kansakar, Baidehi kansakar தம்பதியின் மகள் Bindabasini kansakar
இவர் தனது 2012 ஆண்டு 12 வகுப்பு படுத்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த Dilip raj kesari என்ற இளைஞர் Bindabasini யை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு Bindabasini kansakar பல முறைகள் மறுப்பு தெரிவித்துள்ளார், ஆனால் அந்த இளைஞர் அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்துள்ளார் இதனால் பயந்து போன Bindabasini kansakar தனது தந்தையிடம் கூறியுள்ளார். பெண்ணின் தந்தை அந்த இளைஞரிடம் இவ்வாறு செய்யக்கூடாது என்று அமைதியான முறையிலேயே கண்டித்துள்ளார் ஆனால் இதனால் ஆத்திரமடைந்த Dilip raj kesari 15 நாட்களுக்குப் பிறகு Bindabasini kansakar ரியிடம் வந்து உனது பார்ட்டிக்காக நான் தேன் கொண்டு வந்துள்ளேன் என்று கூறி
Bindabasini kansakar யின் முகத்தில் ஆசிட்டை போற்றியுள்ளார். முகம் முழுவதும் வெந்து அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சிகிச்சை கொடுத்து வந்தனர். பின்னர் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.


இந்த நிலைமையில் Bindabasini kansakar தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை தேடி செல்ல முயற்சி செய்தார் !


இதைப்போன்று ஆண்கள் மூலம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட சராசரி பெண்களைப்போல வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் தானும் பிற பெண்களைப் போல தனது வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறிச் செல்லவேண்டும் என்று அவருக்குள் ஏற்பட்ட உத்வேகத்தை தொடர்ந்து பாதியிலேயே அவர் கைவிட்ட பள்ளிப் படிப்பையும் அதைத்தொடர்ந்து தற்போது கல்லூரியிலும் படித்து வருகின்றார் இது ஒருபுறமிருக்க மன உறுதியுடன் மற்றொருபுறம் தனக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் இருந்து தான் மீண்டு வருவதற்காக சிகிச்சையையும் மற்றொருபுறம் செய்து வந்துள்ளார் Bindabasini kansakar.


இதற்கு அவரது குடும்பத்தினர் பல வகையில் தைரியம் கொடுத்துள்ளனர்.


அதன் விளைவாக இந்தியா தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தேவதாஸ் மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்யும் மற்றொரு புறம் நடந்து வந்தது, இதன் விளைவாக இன்று Bindabasini kansakar பல அறுவை சிகிச்சைகளை மன உறுதியுடன் கடந்து ஒரு அழகிய தோற்றத்தை தற்போது பெற்றுள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.