ETV Bharat / city

எய்ம்ஸ் ஒப்பந்த நடைமுறைகள் தொடக்கம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்

author img

By

Published : Apr 10, 2022, 11:06 PM IST

எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்த நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் பணி தொடங்கும் என மத்திய அரசு கூறியதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மா.சுப்ரமணியன் தகவல்
மா.சுப்ரமணியன் தகவல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய அவசர சிகிச்சை மையம், அறுவை சிகிச்சை மையம் மற்றும் தீக்காயப்பிரிவு கூடுதல் அறை உள்ளிட்டவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதில் மக்கள்நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மேயர் இந்திராணி, அரசு மருத்துவமனை முதல்வர் ரத்னவேல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூமிநாதன், கோ.தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ' "இன்னுயிர் காப்போம் திட்டம்" மூலம் கடந்த 3 மாதங்களில் 44,105 பேர் பயன்பெற்றுள்ளனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான கூடுதல் நிதி: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 60 லட்சத்தி 1ஆவது பயனாளியை நேரடியாக சந்தித்து மருந்து பெட்டகம் வழங்கியுள்ளோம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மூன்றாம் பாலினத்தவருக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சையில் 207 முன்றாம் பாலினத்தவருக்கு, 85 திருநங்கைகள் 122 திருநம்பிகளில் 44 பேருக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாக புனித சேவை செய்யப்பட்டுள்ளது. வருகிற நிதி அறிக்கைக்கான மானிய கோரிக்கையில் மூன்றாம் பாலினத்தவர்கள் அறுவை சிகிச்சைக்கான கூடுதல் நிதி தொடர்பாக அறிவிக்க உள்ளோம்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

ரூ.267 கோடி ஒதுக்கீடு: மதுரை அரசு மருத்துவமனையில் ஜப்பானிய நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ.128 கோடி மதிப்பிலான 6 அடுக்கு கட்டிட பணிகளும், ரூ.139 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்கும் பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும். தைராய்டு சிகிச்சை என்டோஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்து மதுரை அரசு மருத்துவமனைமில் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக கரோனா இறப்பு என்பதே இல்லாத நிலை தமிழகத்தில் நிலவுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

XE கரோனா வைரஸ் - எச்சரிக்கை: இருந்தபோதிலும் மூன்று மாதங்களுக்கு கரோனா வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது.

எனவே, கரோனா தொற்றின் அச்சம் பெரிய அளவில் குறையவில்லை என்றும் XE கரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை. புதிய தொற்று வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். கரோனா நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்

ஒப்பந்தப் பணிகள் தொடக்கம்: எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடர்பாக, மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஒப்பந்த பணிக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார். ஒப்பந்த பணிகள் முடிவடைந்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்.

இருப்பினும், காலிப்பணியிட நியமனங்களில பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒப்பந்த பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் பணியில் உள்ள நிலையில் சீரமைத்து பின்னர் தேவையறிந்து காலிப்பணியிடங்கள் நிரப்பபடும். கரோனா பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணியமர்த்தபட்டுள்ளனர்.

மினிகிளினிக் கில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு காலி பணியிடங்களுக்கான மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான முன்னுரிமை வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

குண்டாஸில் கைது: புதிய பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மருந்துகங்களிலும் போதை மாத்திரை விற்பனை குறித்து சுகாதாரத்துறை மூலமாக ஆய்வு நடத்தப்பட்டு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் 490 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: புதிய வகை கரோனா 'எக்ஸ்இ' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.