ETV Bharat / city

கூட்டுறவு வங்கியில் முறைகேடு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

author img

By

Published : Aug 20, 2021, 11:44 AM IST

கூட்டுறவு வங்கியில் ஐந்து பவுன் நகை கடன் பெற்ற நபர்களின் முறைகேடுகள் நடந்திருக்கிறது என மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

minister i periyasamy, ஐ பெரியசாமி, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி
minister i periyasamy press meet

மதுரை: சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று (ஆக. 19) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம்.

தற்போது, கூட்டுறவு வங்கியில் ஐந்து பவுன் நகைக் கடன் பெற்ற நபர்களின் மூலம் முறைகேடுகள் நடந்திருக்கிறது. எனவே, அதை ஆராய்ந்து தகுதி உடைய நபர்களுக்கு நிச்சயமாக ஐந்து பவுனுக்கு குறைவாக வைத்திருக்கும் நபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதன்படி நிச்சயமாக செயல்படுத்துவோம்" என்றார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் கீழ் நகை வைத்துள்ளவர்களின், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது.

யாருக்கு கிடையாது இச்சலுகை?

இந்நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் உரிய நபர்களின் பட்டியலை கண்டறிந்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக அலுவலர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பினார்.

இதில் ஒரு குடும்பத்திற்கு ஒரு நபர் வைத்துள்ள நகைக் கடன் மட்டுமே தள்ளுபடி எனவும் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும், அதிக சொத்துள்ள நபர்கள் எவரேனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனரா என்பதையும் சரிபார்த்து, முழு விவரங்களை அனுப்பபும்படி அதில் உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வளர்ச்சிக்கு சாதி தடையாக இருக்க கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.