ETV Bharat / city

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி கோயில் நடை சாத்தப்படுகிறது

author img

By

Published : Oct 15, 2022, 6:17 PM IST

அக்டோபர் 25ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்படுவதாக மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி கோயில் நடை சாத்தப்படுகிறது
சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி கோயில் நடை சாத்தப்படுகிறது

மதுரை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25 காலை 11:00 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதாக மீனாட்சி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் அருணாச்சலம் கூறிகையில்,

“வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.23 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கின்ற காரணத்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற உள்ள கால சந்தி பூஜை காலத்தில் உச்சி காலம் சாய்ரட்சை ஆசிய பூஜைகள் நடைபெற்று முடிந்தவுடன் திருக்கோயில் நடை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் மற்றும் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும்.

அக்குறிப்பிட்ட நேரத்தின் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை. அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, கிரகண கால அபிஷேகம் நடைபெறும்.

அதன் பின் அபிஷேகம் முடிவடைந்து அருள்மிகு சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். இரவு 07.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு அன்று ஒரு நாள் மட்டும் இரவு 07.00 மணிக்குப் பின் நடைபெறும்.

இதேபோன்று இத்திருக்கோயிலின் நிர்வாகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் இதே நேரத்தில் நடை சாத்தப்பட்டு, நடை திறக்கப்படுவதுடன் பூஜைகள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- எங்கெல்லாம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.