ETV Bharat / city

தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் தரிசனம் தருவார் மீனாட்சி அம்மன்!

author img

By

Published : Dec 12, 2021, 7:41 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை (டிசம்பர் 13) முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

fully vaccinated only allowed to meenakshi temple, madurai meenakshi amman kovil, Documents needed for entry of Meenakshi Temple, இரண்டு டோஸ் போட்டவர்கள் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதி, கரோனா தொற்று மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கை
மதுரையில் தடுப்பூசி போட்டால்தான் சாமி தரிசனம்

மதுரை: இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "கரோனா நோய் மூன்றாவது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டுதல்படி கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே டிசம்பர் 13ஆம் தேதி (நாளை) முதல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்க்காணும் ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

  • கரோனா தொற்று தடுப்பூசி சான்றிதழ் நகல்
  • கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்
  • பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது
  • வாட்ஸ்-அப் செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்
  • கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதிmசெய்வது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாகவி பாரதிக்கு வானுயர சிலை வேண்டும் - பாரதி புகழ் பாடும் தமிழிசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.