ETV Bharat / city

'கூட்டுறவுச் சங்க மோசடி... உயர்மட்ட குழு விசாரிக்க வேண்டும்' - வலுக்கும் கோரிக்கைகள்

author img

By

Published : Jan 26, 2020, 9:07 PM IST

Updated : Jan 26, 2020, 10:50 PM IST

கூட்டுறவு நாணய சங்கத்தில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் உயர் அலுவலர்களுக்கு தொடர்பிருப்பதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மோசடியில் தொடர்புள்ளவர்களே விசாரணை செய்வதால், உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

cooperative society scam in erode
cooperative society scam in erode

ஈரோடு: கூட்டுறவுச் நாணயச் சங்க மோசடி குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

ஈரோடு பவானி சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையின் தலைவராக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு உள்ளார். இங்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், காவலர் சீருடை ஆகியவற்றிற்கான துணிகள் பதனிடப்படுகின்றன.

குருப் 4 தேர்வில் முறைகேடு உறுதி: 39 தேர்வர்கள் பட்டியல் நாளை வெளியீடு

ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காக 1998ஆம் ஆண்டு கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் 400 ஊழியர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்த நிலையில், தற்போது 130 ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஊழியர்களுக்கு சங்கத்திலிருந்து கடன் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு 2016ஆம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு கடன் வழங்கியதில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகப் புகாரெழுந்தது.

இரண்டு லட்சம் கடன் வாங்கியவர்களின் பெயரில் 4 லட்சம் ரூபாய் பற்றுவைத்திருப்பதாகவும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் கடன் நிலுவையில் இருப்பதாகக் கூறி பணப்பயன்களை வழங்க மறுப்பதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர். இச்சூழலில், இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மணி உத்தரவின் பேரில் நான்கு பேர் கொண்ட அலுவலர்கள் குழு ஊழியர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

குரூப்-4 தேர்வில் முறைகேடு - 99 பேரின் பட்டியலை வெளியிடத் திட்டம்!

கடன் பெற விண்ணப்பித்தபோது, விண்ணப்பத்தில் கூடுதலான தொகை குறிப்பிடப்பட்டதாகவும், ஆனால் அதைவிட குறைவான தொகையை மட்டுமே கடனாக பெற்றிருப்பதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். தற்போது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தொகையை வாராக்கடனாக குறிப்பிட்டு தொகையை செலுத்துமாறு அலுவலர்கள் நிர்பந்திப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சங்கத்தின் செயலாளர் வீரக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். மோசடி செய்து பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாகத் தன் மீது அலுவலர்களே தவறான தகவல்களைப் பரப்பிவருவதாகவும், கூட்டுறவு சங்க விதிகளை மீறி கடன் வழங்கிய மாவட்ட கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தப்பிப்பதற்காக தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

99 தேர்வர்கள் தகுதி நீக்கம்... தேர்வெழுத வாழ்நாள் தடை! - டிஎன்பிஎஸ்சி அதிரடி

கணக்குகளை சரிசெய்து விசாரணையை முடித்துக் கொள்ளலாம் என்றும் தனக்கு ஒத்துழைப்பு தருமாறும் துணைப் பதிவாளர் மணி, அலைப்பேசியில் தன்னிடம் பேசிய குரல் பதிவையும் வீரக்குமார் வெளியிட்டார். இதனிடையே கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற மோசடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஆலையின் தலைவருமான தென்னரசு அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தபின் சங்கத்தின் செயலாளர் வீரக்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். படிப்பறிவு குறைவான ஊழியர்கள் பெயரில், கூடுதலான கடன்களைப் பெற்றதாக மோசடி செய்த சம்பவத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உயர் அலுவலர்களுக்கும் தொடர்பிருப்பதாகச் சங்க உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது!

தற்போது விசாரணை என்ற பெயரில் அந்த அலுவலர்களே தங்களிடம் விசாரணை நடத்திவருவதாகவும், இதில் எப்படி நீதி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே சென்னையிலிருந்து உயர்மட்ட அலுவலர்கள் குழுவினர் இதில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.

கூட்டுறவுச் சங்க மோசடியில் திருப்பம்
Intro:ஈரோடு ஆனந்த்
ஜன25

ரூ.7.50 கோடி கூட்டுறவு சங்க மோசடியில் திருப்பம் - ஊழலை சரிகட்ட துணை பதிவாளர் பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

ஈரோட்டில் கூட்டுறவு நாணய சங்கத்தில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மோசடியில் தொடர்புள்ளவர்களே விசாரணை அதிகாரிகளாகவும் இருப்பதால், உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

ஈரோடு பவானி சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் தலைவராக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு உள்ளார். இங்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், காவலர் சீருடை ஆகியவற்றிற்கான துணிகள் பதனிடப்படுகின்றன.

ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காக 1998ம் ஆண்டு கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில் 400 ஊழியர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்த நிலையில் தற்போது 130 ஊழியர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஊழியர்களுக்கு சங்கத்தில் இருந்து கடன் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு கடந்த 2016 ம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு கடன் வழங்கியதில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

2 லட்சம் கடன் வாங்கியவர்களின் பெயரில் 4 லட்சம் ரூபாய் பற்று வைத்திருப்பதாகவும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் கடன் நிலுவையில் இருப்பதாக கூறி பணப்பயன்களை வழங்க மறுப்பதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மணி உத்தரவின் பேரில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் பெற விண்ணப்பித்த போது, விண்ணப்பத்தில் கூடுதலான தொகை குறிப்பிடப்பட்டதாகவும் ஆனால் அதை விட குறைவான தொகையை மட்டுமே கடனாக பெற்றிருப்பதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். தற்போது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தொகையை வராக்கடனாக குறிப்பிட்டு தொகையை செலுத்துமாறு அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் தெரிவித்தனர். இதனிடையே மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சங்கத்தின் செயலாளர் வீரக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

மோசடி செய்து பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக தன் மீது அதிகாரிகளே தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், கூட்டுறவு சங்க விதிகளை மீறி கடன் வழங்கிய மாவட்ட கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தப்பிப்பதற்காக தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். கணக்குகளை சரி செய்து விசாரணையை முடித்து கொள்ளலாம் என்றும் தனக்கு ஒத்துழைப்பு தருமாறும் துணைப்பதிவாளர் மணி, செல்போனில் தன்னிடம் பேசிய ஆடியோவையும் வீரக்குமார் வெளியிட்டார்.

இதனிடையே கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற மோசடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வும், ஆலையில் தலைவருமான தென்னரசு அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின் சங்கத்தின் செயலாளர் வீரக்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Body:படிப்பறிவு குறைவான ஊழியர்கள் பெயரில், கூடுதலான கடன்களை பெற்றதாக மோசடி செய்த சம்பவத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உயர் அதகாரிகளுக்கும் தொடப்பிருப்பதாக சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Conclusion:தற்போது விசாரணை என்ற பெயரில் அந்த அதிகாரிகளே தங்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் எப்படி நீதி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே சென்னையில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் இதில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..

பேட்டிகள்.
1. வாசுதேவன். தொமுச நிர்வாகி.
2. வீரக்குமார், தலைமறைவானதாக கூறப்படும் சங்க செயலாளர்.
3. வீரக்குமார்& கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் மணி பேசிய செல்போன் உரையாடல்.
Last Updated :Jan 26, 2020, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.