ETV Bharat / city

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 4,500 வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

author img

By

Published : Aug 10, 2022, 12:48 PM IST

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமக அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 4,500 வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 4,500 வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 4,500 வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து 25 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் சத்தியமங்கலம் புதுக்கொத்துக்காடு பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததால், வாழை மரங்கள் அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள 4,500 வாழை மரங்கள் நீரில் மூழ்கின.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 4,500 வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

வாழை மரங்கள் மட்டுமின்றி தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள 400 க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளும், 2 ஏக்கர் கரும்பு பயிரும் நீரில் மூழ்கின. வாழை, தென்னை, கரும்பு என விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியதால் ரூ.15 லட்சம் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உதகை மண்சரிவு: அடித்துச் செல்லப்பட்ட கேரட் தோட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.