ETV Bharat / city

மாசாணியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட 92 அடி உயர கொடிமரம்!

author img

By

Published : Jan 23, 2020, 7:10 AM IST

கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கொடியேற்றல் நிகழ்ச்சிக்காக 92 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

masani amman kovil function
masani amman kovil function

கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கொடியேற்ற நிகழ்ச்சிக்காக புதன்கிழமை சேத்துமடை பகுதிக்கு மூங்கில் கொடிமரம் எடுத்துவர பக்தர்கள் சென்றனர். ஆனைமலை முன்னாள் பேரூராட்சித்தலைவர் சாந்தலிங்ககுமார், மாசாணியம்மன் கோயில் தலைமை முறைதாரர் மனோகரன், மாசாணியம்மன் நற்பணிமன்றத்தினரும் பக்தர்களுடன் சென்றனர்.

மலையிலிருந்து 92 அடி உயரமுள்ள மூங்கில் மரம் தேர்வு செய்யப்பட்டுட்டது. பக்தர்கள் மூங்கில் மரத்தை வெட்டி, மலையிலிருந்து தோளில் சுமந்து மூங்கில் கொடிமரத்தை சேத்துமடை அருகில் உள்ள சர்க்கார்பதி அம்மன் கோயிலுக்கு கொண்டுவந்தனர்.

கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட 92 அடி உயர கொடிமரம்!

அங்கு ஓடையில் பக்தர்கள் நீராடி கோயிலில் வழிபாடு செய்துவிட்டு கொடிமரத்திற்கு திருநீர், மஞ்சள், குங்குமத்தில் திலகமிட்டு, மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின் மீண்டும் அங்கிருந்து தோளில் சுமந்து ஆனைமலை மாசாணியம்மன் கோயில் வரை எடுத்துவந்தனர். அதைத்தொடர்ந்து, மாசாணியம்மன் கோயில் அருகேயுள்ள உப்பாற்றில் வைத்து நீராட்டி சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் வளாகத்தில் கொடிமரம் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'யானையும் பாகனும் ஒரே இலையில்' - வைரல் வீடியோ!

Intro:kovilBody:kovilConclusion:மாசாணியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட குண்டம் கொடிமரம்


பொள்ளாச்சி, ஜன.22

 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கொடியேற்றல் நிகழ்ச்சிக்காக 92 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கொடியேற்றதல் நிகழ்ச்சிக்காக புதன்கிழமை சேத்துமடை பகுதிக்கு மூங்கில் கொடிமரம் வெற்றி எடுத்துவர பக்தர்கள் சென்றனர். ஆனைமலை முன்னாள் பேரூராட்சித்தலைவர் சாந்தலிங்ககுமார், மாசாணியம்மன் கோயில் தலைமை முறைதாரர் மனோகரன், மாசாணியம்மன் நற்பணிமன்றத்தினர், விழாக்குழுவினர் ஆகியோர் பக்தர்களுடன் சென்றனர். 

   மலையிலிருந்து 92 அடி உயரமுள்ள மூங்கில் மரம் தேர்வு செய்யப்பட்டு பக்தர்கள் மூங்கில் மரத்தை வெட்டினர். மலையில் இருந்து தோளில் சுமந்து மூங்கில் கொடிமரத்தை சேத்துமடை அருகில் உள்ள சர்க்கார்பதி அம்மன் கோயிலுக்கு கொண்டுவந்தனர். அங்கு ஓடையில் பக்தர்கள் நீராடி கோயிலில் வழிபாடு செய்துவிட்டு கொடிமரத்திற்கு திருநீர், மஞ்சள், குங்குமத்தில் திலகமிட்டு, மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அங்கிருந்து தோளில் சுமந்து ஆனைமலை மாசாணியம்மன் கோயில் வரை எடுத்துவந்தனர். 

 மாசாணியம்மன் கோயில் அருகே உள்ள உப்பாற்றில் வைத்து நீராட்டி சிறப்பு பூஜைகள் செய்து கோயில் வளாகத்தில் கொடிமரத்தை வைத்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.