ETV Bharat / city

பொதுப்பணித்துறையின் வேலையை செய்த கேசிபி நிறுவனம்... லஞ்ச ஒழிப்பு சோதனையில் அம்பலம்!

author img

By

Published : Aug 12, 2021, 1:28 PM IST

கோயம்புத்தூரில் லஞ்ச ஒழிப்பு சோதனைக்குள்ளான சந்திரபிரகாஷின் கேசிபி நிறுவனம், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் லட்சுமணன் இல்லத்தை பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து கொடுத்துள்ளது குறித்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

kcp-engineers-company-issue-related-to-minister-velumani
kcp-engineers-company-issue-related-to-minister-velumani

கோயம்புத்தூர்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் நேற்று முன் தினம் (ஆக.10) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.

கோவையில் வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில் குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் லட்சுமணன் இல்லம் உள்ளிட்ட 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.

இதில் கணக்கில் வராத பணம், ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்ந நிலையில் லஞ்ச ஒழிப்பு சோதனைக்குள்ளான சந்திரபிரகாஷின் கேசிபி நிறுவனம், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் லட்சுமணன் இல்லத்தை பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து கொடுத்துள்ளதற்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

பொதுப்பணித்துறை மட்டுமே செய்யக்கூடிய இந்தப் பணிகளை கேசிபி நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தி செய்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தலைமைப் பொறியாளர் இல்லத்தை கேசிபி நிறுவனம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து புனரமைப்பு செய்து கொடுத்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் வாங்கிய பில்களின் நகல் வெளியாகி உள்ளது.

அரசு கட்டடங்களை வழக்கமாக பொதுப்பணித்துறையே சரி செய்து கொடுக்கும் நிலையில் கேசிபி நிறுவனம் மாநகராட்சி அலுவலர்களின் அரசு குடியிருப்பை நவீன வசதிகளுடன் புனரமைத்து கொடுத்துள்ளது.

வாஸ்து நிபுணர்கள் ஆலோசனையுடன் இந்நிறுவனம் புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை சென்ற எஸ்பி வேலுமணி - 'ஜெய் வேலுமணி' என முழங்கிய ஆதரவாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.