ETV Bharat / city

'அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அறிவிப்பு' - கார்த்திக் சிதம்பரம் எம்.பி., வரவேற்பு

author img

By

Published : Apr 13, 2022, 11:01 PM IST

இந்தியா முழுவதும் பாஜகவிற்கு அடுத்து 19 முதல் 20% வாக்குகளை வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ். பாஜகவிற்கு பிரதான கட்சி, அதற்கடுத்ததாக காங்கிரஸ் அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துள்ளோம். நாங்கள் கூட்டணி சேருமிடம் வெற்றி பெறுகிறது. காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகமாகவும் தொண்டர்கள் குறைவாகவும் உள்ளதாக கூறுவது என்பது சோம்பேறித்தனமான விமர்சனம் என்று சாடியுள்ளார்.

கார்த்திக் சிதம்பரம் எம்பி
கார்த்திக் சிதம்பரம் எம்பி

கோவை விமான நிலையத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, இந்தியாவிற்கு சமத்துவம் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. மத்தியில் இருக்கும் பாஜக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

குறிப்பாக பாபர் மசூதி தீர்ப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், தலாக் விவகாரம், குடியுரிமை திருத்தச்சட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு தருணத்திலும் இஸ்லாமிய மக்களை ஒடுக்க நினைக்கிறார்கள். ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் தேர்வு எழுத முடியாது என்றெல்லாம் செய்கின்றனர்.

அம்பேத்கர் பிறந்த நாள்-சமத்துவ நாள்: இந்து கோயில்களில் பண்டிகைகள் நடைபெறும்போது, இந்து மக்களை சாராதவர்கள் கடை வைக்கக் கூடாது எனவெல்லாம் கூறி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசியல் புல்டோசர் அரசாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், அம்பேத்கர் பிறந்தநாளை "சமத்துவ நாள்" எனக் கூறுவதை முழுமையாக வரவேற்கிறேன். தற்போதைய, மத்திய அரசு மற்றும் நிதியமைச்சர், பிரதமர் இருக்கும் வரை விலைவாசி குறையாது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தால் மற்ற அனைத்து பொருட்களின் விலையும் உயரும். பொருளாதார சுமையை சாதாரண மக்கள் மீது, மத்திய அரசு சுமத்துகிறது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் மத்திய அரசு விலையை குறைக்கவில்லை.

தொடரும் பிரச்னைகளும் இந்துத்துவமும்: ஏற்கெனவே, பல்வேறு அடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எந்த நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இதிலிருந்து மீண்டு வராத நிலையில், பெட்ரோல்-டீசல் வரி சுமை மூலம் இந்தியாவை பாதாளத்திற்குத் தள்ளி விட்டனர். பஞ்சு விலையில் 10 % இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், வரியை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இந்துத்துவாவை வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி

குற்றச்சாட்டு: அத்துடன் இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பதால் மற்ற பிரச்னைகளைப் பற்றி சிந்திப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மகளிர் இலவச திட்டங்களை நிறுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், 'புதிய அரசு அமைந்த பிறகு வந்த நிதியமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில், தற்போது மாநிலத்தில் இருக்கும் நிதிநிலைமை குறித்தும் தெரிவித்துள்ளார். எல்லா நேரத்திலும் சலுகைகளை வழங்க முடியாது.

இலவச திட்டங்களை சற்று குறைக்கவேண்டும் என்பது தான் அவர்களுக்கு வந்திருக்கும் ஆலோசனை. அதேவேளையில், கல்வி கற்கும் மகளிருக்கு நிதி வழங்க உள்ளனர். அரசின் இந்த முடிவு இடைக்காலத்தில் கசப்பாக இருந்தாலும், இந்த முடிவு நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. அதே போல, EVKS இளங்கோவன் தன்னை குழந்தை என்ற கருத்தையும், அடுத்த தலைவர் என்று கூறிய இரண்டு கருத்துகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகம்; தொண்டர்கள் குறைவு என்பது சோம்பேறித்தனமான விமர்சனம். இந்தியா முழுவதும் பாஜகவிற்கு அடுத்து 19 முதல் 20 % வாக்குகளை வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ். பாஜகவிற்கு பிரதான கட்சி, அதற்கடுத்ததாக காங்கிரஸ் அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துள்ளோம். நாங்கள் கூட்டணி சேருமிடம் வெற்றி பெறுகிறது. இது ஆய்வுக் கருத்து இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயகரமானது - கார்த்தி சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.