ETV Bharat / city

Video: கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவரை அரை நிர்வாணமாக்கி துன்புறுத்திய சக மாணவர்கள்!

author img

By

Published : Apr 1, 2022, 5:38 PM IST

கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் சீனியர் மாணவர் ஒருவரை, அதே கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தியது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தனியார் கல்லூரி
கோவை தனியார் கல்லூரி

கோவை: குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் ஒருவரை அதே கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கிடையே அடிதடி நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.

மாணவர்கள் மோதல்: இதில், கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியைச் சேர்ந்த மாணவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்துச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டபோது, 'சீனியர்னா பெரிய இவனா நீ..! இதுக்கு மேலயும் அடங்கவில்லை என்றால் நிர்வாணமாக சுத்தவிடுவோம்' என மிரட்டி அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இவ்விவகாரத்தில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் மோதிக் கொள்ளும் காணொலி

காவல்துறை விசாரணை: மேலும், அடி வாங்கிய மாணவனின் ஐபோனை பறித்துச்சென்று எதிர்தரப்பினர் மிரட்டல் அளிப்பதாக கூறப்படுகிறது. இது காதல் விவகாரமா? அல்லது கல்லூரி ராகிங் விவகாரமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பொதுவெளியில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு, கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவரை அடித்து நிர்வாணம் ஆக்கி துன்புறுத்திய சம்பவம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: மாநில அரசிற்கு கூடுதல் செலவு ஆகிறது; ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விரைந்து தாருங்கள் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.