ETV Bharat / city

தமிழன் பட இயக்குநருடன் இணையும் விமல், யோகி பாபு

author img

By

Published : Oct 18, 2022, 1:15 PM IST

விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கத்தில், விமல் மற்றும் யோகி பாபு நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.

யோகி பாபுவை இயக்கும் விஜய் பட இயக்குனர்
யோகி பாபுவை இயக்கும் விஜய் பட இயக்குனர்

இளைய தளபதி விஜய் நடித்த "தமிழன்" மற்றும் துணிச்சல், டார்ச் லைட் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் அப்துல் மஜீத். இவர் தற்போது விமல், யோகி பாபு நடிப்பில் புதிய படமொன்றை அதிக பொருட்செலவில் தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

சில புரோக்கர்கள் தம் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து இப்படம் சொல்லும் என்று இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ விமல் ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நடந்து முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அரண்மனை போன்ற இடத்தில் நடக்க உள்ளது. கான்ஃபிடன்ட் பிலிம் கேப் (Confident Film Cafe) சார்பில் இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து டைரக்டு செய்கிறார் அப்துல் மஜீத். பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். முன்னதாக படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், ஆடியோ வெளியிடப்பட உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஒர் தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா விஜய்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.