ETV Bharat / city

விசிகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நெருக்கத்தை பாஜக குறைக்க முயல்கிறது: விக்ரமன் குற்றச்சாட்டு

author img

By

Published : Aug 5, 2021, 11:03 PM IST

எங்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உள்ள நெருக்கத்தினை குறைக்க பாஜக முயல்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் விக்ரமன் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினைச் சார்ந்த நிர்வாகிகள் பெயரில் போலியான மின்னஞ்சல் கணக்குகள் உருவாக்கப்பட்டு, அவதூறான செய்திகளை சிலர் பரப்பி வருவதாகவும், அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசிக மாநில செய்தித் தொடர்பாளர் விக்ரமன் சென்னையில் காவல் துறை ஆணையாளரை நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெயரிலும், என் பெயரிலும் ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, இஸ்லாமியர்களை பற்றிய அவதூறான செய்திகளை, அரசியல் சாராத இஸ்லாமியர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறார்கள்.

அவதூறு பரப்புரையை இப்படி செய்வதன்மூலம் தான் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சமூக நல்லிணத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்த வேலையை சிலர் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்

அவர்கள் யார்?

எனவே, இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை ஆணையாளரை சந்தித்து புகார் அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

அவர்கள் அனுப்பும் செய்திகள் தெளிவான ஆங்கிலத்திலும், நாங்கள் செய்தி அனுப்புவதை போலவே உள்ளது. இதனால் பொதுவான இஸ்லாமியர்கள் இதை நம்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எங்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நெருக்கத்தை குறைப்பதற்கான தேவை வேறு யாருக்கு உள்ளது? இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் உள்ள நெருக்கத்தினை குறைக்க பாஜகவினர் தான் முயல்கின்றனர்.

இந்த அரசியல் சமூக நீதி என்பதுதான் முடிவு செய்யப்பட்டது. ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். அது அரசின் கடமை . நிச்சயம் அதனை அரசு செய்யும்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, சட்டத்தை மாற்று- பிரியங்கா காந்தி!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.