ETV Bharat / city

உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு டிச. 8 முதல் 10 வரை கலந்தாய்வு

author img

By

Published : Nov 25, 2021, 8:49 AM IST

தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை வரும் டிசம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Tamil nadu public service commission,  TNPSC, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
Tamil nadu public service commission

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 2021 ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றது.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பத்தாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் செப்டம்பர் 23ஆம் தேதி https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளியீடு

அதன் அடிப்படையில் மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறும்.

மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமாெத்த தரவரிசை எண், இட ஒதுக்கீடு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விதிகளின்படி நடைபெறும்

அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்துக் கொண்டு கலந்துக் கொள்ளலாம். மேலும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு விதிகளின் அடிப்படையில் நடைபெறும். அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. மேலும், விண்ணப்பதாரர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசு அலுவலர்களை செருப்பால் அடிக்க அனுமதிகேட்டு மனு: கலெக்டருக்கு ஷாக் கொடுத்த சமூக ஆர்வலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.