ETV Bharat / city

அனாதை ஆக்கப்படுகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்?

author img

By

Published : Jun 24, 2019, 7:52 PM IST

தங்க தமிழ்ச்செல்வன்

இனியும் தினகரனோடு இணைந்து செயல்பட்டால் இருக்கும் பணத்தையும் இழந்து, கொஞ்ச நஞ்சம் இருக்கும் அரசியல் எதிர்காலத்தையும் இழந்துவிடுவோம் என அஞ்சும் தங்கம் விரைவில் அக்கட்சியிலிருந்து வெளியேறுவார் என பலர் கூறினர். இதனால் அமமுக கூடாரத்தில் விரைவில் பெரும் புயல் ஒன்றும் உருவெடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் கழற்றிவிடப்பட்டதை அடுத்து அவரது நிழலாக தங்க தமிழ்ச்செல்வன் செயல்பட்டு வருகிறார். அவர் தனக்கு காட்டும் விசுவாசத்திற்கு கைமாறாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட அவருக்கு டிடிவி வாய்ப்பளித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியடைந்தார். இருப்பினும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட விருப்பமில்லை அதுமட்டுமில்லாமல் செலவு செய்யப் பணமுமில்லை என அவர் கூறியதாகவும் தகவல் கசிந்தது.

இது இப்படி இருக்க, தினகரன் மீது தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் அமமுகவிலிருந்து விலகி விரைவில் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை அவர் மறுத்து வந்தார். மேலும், சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சர்கள் இரண்டு பேர் சந்தித்ததாகவும், ஈபிஎஸ்ஸிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தருகிறோம் என அவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியானது. இதனையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளும், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி இனியும் தினகரனோடு இணைந்து செயல்பட்டால் இருக்கும் பணத்தையும் இழந்து, கொஞ்ச நஞ்சம் இருக்கும் அரசியல் எதிர்காலத்தையும் இழந்துவிடுவோம் என அஞ்சும் தங்கம் விரைவில் அக்கட்சியிலிருந்து வெளியேறுவார் என பலர் கூறினர். இதனால் அமமுக கூடாரத்தில் விரைவில் பெரும் புயல் ஒன்றும் உருவெடுக்க வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.

இதற்கிடையே இன்று மாலை தனியார் விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் நகரம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்த நிலையில். தங்க தமிழ்ச்செல்வன் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து டிடிவி தினகரனை சந்திப்பதற்கு நிர்வாகிகள் சென்னை சென்றுவிட்டனர். மேலும், கூட்டத்திற்காக பழனிசெட்டிபட்டியில் உள்ள விடுதிக்கு வந்த தங்க தமிழ்செல்வன் சில நிமிடங்களிலே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனின் நேரடி உதவியாளரை தொடர்பு கொண்டு தினகரன் குறித்து மிகவும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், டிடிவி தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இருந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அதனால் அவர் விரைவில் அதிமுகவில் இணையலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. ஆனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருப்பதாலும், தனது மகனை எதிர்த்து தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டதாலும் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவதற்கு அவர் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார் என கூறப்படுகிறது.

ஏனெனில், தங்க தமிழ்ச்செல்வனை கட்சிக்குள் விட்டால் தேனியில் தனக்கு எதிராக லாபி செய்வார் எனவே தனது கரம் ஒடுங்கிவிடும் என ஓபிஎஸ் கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதேவேளையில் ஈபிஎஸ்ஸை அணுகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள தமிழ்ச்செல்வன் மூவ் செய்தாலும், பாஜகவின் காற்று தற்போது மீண்டும் ஓபிஎஸ் பக்கம் வீசத் தொடங்கியிருப்பதால், டெல்லி கொண்டு அதற்கும் அவர் முட்டுக்கட்டை போடுவார். அதுமட்டுமின்றி இந்த ஆடியோ விவகாரம் டிடிவி தினகரனின் காதுக்கும் சென்றிருக்கும். எனவே அவர் அமமுகவில் நீடித்தாலும் பழையபடி அவரால் செயல்பட முடியாது.

எனவே அதிமுகவிலும் இணைய முடியாது. அமமுகவில் நீடித்தாலும் சுய மதிப்பை விட்டுக்கொடுத்துதான் இருக்க வேண்டும். ஆக இந்த ஆடியோ மூலம் தங்க தமிழ்ச்செல்வன் அரசியல் அனாதை ஆக்கப்படுவாரோ என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Intro:Body:

சுப.பழனிக்குமார் - தேனி.    24.06.2019.



டிடிவி தினகரன் -  தங்கதமிழ்செல்வனுக்கு இடையே மோதல் உச்சம்.

     தங்கதமிழ்செல்வன்  அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலையடுத்து தினகரனை மரியாதைக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து பேசிய ஆடியோவால் பரபரப்பு.



அமமுக மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையிலான அமமுகவினர், தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், விரைவில் தேனிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்கப்படுவதாகவும் கூறி நேற்று

தேனி மாவட்ட ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவலையடுத்து, தினகரனை விமர்சித்து அவரது நேர்முக உதவியாளர் ஜனா விடம் தங்கதமிழ்செல்வன் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் நான் நல்லவன் ஆனால் டிடிவி தினகரன் பேடித்தனமான அரசியல் செய்து வருகிறார் என்று அதுமட்டுமில்லாமல் சில வார்த்தைகள் ஆபாசமாகவும்  பேசியுள்ளார். முழுமை பெறாத இந்த ஆடியோ சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று மாலை தனியார் விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் நகரம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்த நிலையில். தங்க தமிழ்ச்செல்வன் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து  டிடிவி தினகரனை சந்திப்பதற்கு சென்னை சென்றுவிட்டனர். இதற்கிடையே கூட்டத்திற்காக பழனிசெட்டிபட்டியில் உள்ள விடுதிக்கு வந்த தங்க தமிழ்செல்வன் சில நிமிடங்களிலே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.   இந்த ஆடியோ குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டபோது தொலைபேசி எண்கள் அனைத்து வைக்கப்பட்டுள்ளது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.