ETV Bharat / city

தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வரத்தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Apr 14, 2022, 10:50 PM IST

Updated : Apr 15, 2022, 6:42 AM IST

தமிழ் மொழியில் புதியதாக ஆஹா என்னும் ஓடிடி தளம் கொண்டுவரப்பட்டது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆஹா தளத்தை வெளியிட்டார்.

தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வரத்தயார்!- முதலமைச்சர் மு க ஸ்டாலின்
தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வரத்தயார்!- முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சென்னை: ஆஹா ஓடிடி தளம் தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் அடி எடுத்து வைத்துள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் புத்தம்புதிய திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. குறிப்பாக, புதிய வெப் தொடர்களின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் இணையத்தொடர்களில் நடித்தவர்கள், இயக்குநர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘பேச்சைக் குறைத்து செயலில் காட்ட வேண்டும் என்று பணியாற்றி வருகிறேன். என்னை அழைத்து இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று கேட்டார்கள். தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வரத்தயார். பெயரே ஆஹா ஆஹா என்றால் என்ன என்று தெரியும் உங்களுக்கு.

மகிழ்ச்சியாக இருக்கும்போது இந்த சொல் பயன்படுத்தப்படும். மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் இந்த ஆஹா ஊடகம் பணியைத் தொடரவேண்டும். அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். அம்பேத்கர் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று நேற்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தேன். மீண்டும் அனைவருக்கும் நன்றி’ என்று கூறினார்.

விஜய் பட இயக்குநர்:மேலும் விஜயின் 66ஆவது படத்தை இயக்கும் வம்சி கலந்துகொண்டார். அவர் பேசும்போது, 'விஜய் 66ஆவது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. என்னால் முடிந்த அளவு படத்தைச் சிறப்பாக எடுப்பேன்' என்றார்.

இதையும் படிங்க:தமிழுக்கென பிரத்யேக ஓடிடி தளம் ஆஹா

Last Updated : Apr 15, 2022, 6:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.