ETV Bharat / city

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு - நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Jan 24, 2022, 1:24 PM IST

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கான நில மதிப்பீட்டை அங்கீகரிக்கும் முறை முறைப்படுத்தப்பட வேண்டும்
தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கான நில மதிப்பீட்டை அங்கீகரிக்கும் முறை முறைப்படுத்தப்பட வேண்டும்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கான நில மதிப்பீட்டை அங்கீகரிக்கும் முறை முறைப்படுத்தப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நிலம் கையகப்படுத்துவதற்கான தகுதிவாய்ந்த ஆணையம் (CALA) நிர்ணயித்த மதிப்பீட்டையோ அல்லது மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்ட நடுவர் முடிவுகளுக்கோ ஒப்புக்கொள்ளவில்லை, இது திட்டச் செயல்முறையை முடக்கியுள்ளது.

விண்ணப்பங்களை ஆராய வேண்டும்
இதேபோல், பல சந்தர்ப்பங்களில் மண்-கிராவல் எடுப்பதற்குத் தேவையான அனுமதி விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஏரிகள், குளங்களில் தண்ணீர் தேக்கமாவதால் அல்லது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் இருப்பதால், சாத்தியமற்ற இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் முன் ஆராயப்பட வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு, மாநில அரசு தனது சிறந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.

மேலும், இவை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவியுள்ளன என்பதை அறிய முடிகிறது. மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விளைவாக துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியின் போது தாங்கள் உரையாற்றியது சற்று வியப்பாக இருந்தது.

முழு ஒத்துழைப்பு

இருப்பினும், அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு, முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று மீண்டும் உறுதியளிக்க விரும்புகிறேன்". என ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குடிபோதையில் பிரியாணி சாப்பிட்டு இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.