ETV Bharat / city

நவம்பரில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

author img

By

Published : Sep 28, 2021, 9:22 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த கட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

mk stalin
mk stalin

சென்னை: நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் மாணவர்கள் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. இதனிடையே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.