ETV Bharat / city

44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

author img

By

Published : Jun 12, 2021, 5:19 PM IST

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு
44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இன்று (ஜூன்.12) 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் கரோனா தொற்றுக்கான மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு சலுகைகளை அளித்து, அவை குறைவான விலையில் கிடைக்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படும் என தெரிகிறது.

கரோனா சிகிச்சையுடன் தொடர்புடைய அனைத்துப் பொருட்களுக்கும் இறக்குமதிக்கான சுங்கக் கட்டணத்தையும் விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு மாநில அரசுகள், ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க உள்ளன.

முன்னதாக கரோனா சிகிச்சை உபகரணங்கள், மருந்துகளுக்கான சரக்கு - சேவை வரியை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய, மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்தது. அதில் மேகாலய நிதியமைச்சர் கான்ராட் சங்மா தலைமை வகித்தார். மேலும் கேரளம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சர்களும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அந்த குழு அளித்த அறிக்கை தொடர்பாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் கரோனா தடுப்பூசிக்கு ஐந்து விழுக்காடும், கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களுக்கு பனிரெண்டு விழுக்காடு ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளன.

ஆகையால் கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், பரிசோதனை கருவிகள், கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கான சிகிச்சை மருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது வரி விதிப்பை தவிா்க்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கூட்டாக வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டுக்கான இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்கவும் வலியுறுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.4 ஆயிரத்து 321 கோடி நிலுவை தொகையை ஒரே தவணையில் உடனடியாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே போல தமிழ்நாட்டிற்கு 2020-21ஆம் ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரை, ரூ.12 ஆயிரத்து 259 கோடி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பூஞ்சை, கரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி-இல் இருந்து விலக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.