ETV Bharat / city

New Commissioner Office Divisions: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் ஆணையரகங்கள்கீழ் இயங்கும் காவல் நிலையங்கள்

author img

By

Published : Jan 2, 2022, 4:22 PM IST

New Commissioner Office Divisions: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களின்கீழ் 45 காவல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Chennai new commissioner offices in aavadi and thambaram
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் ஆணையரகங்கள் கீழ் இயங்கும் காவல் நிலையங்கள்

சென்னை: New Commissioner Office Divisions: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் ஆணையரகங்களின்கீழ் இயங்கும் காவல் நிலையங்கள் செயல்பட உள்ளன.

தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களின் கீழ், மொத்தமாக 45 காவல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தாம்பரம் காவல் ஆனையரகம்

இதில் தாம்பரம் காவல் நிலையத்தின் கீழ் 20 காவல் நிலையங்கள் இயங்குகின்றன.

தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், சிட்லபாக்கம், பீர்க்கன்கரணை, குன்றத்தூர், பல்லாவரம்,சங்கர் நகர்,பள்ளிக்கரணை,பெரும்பாக்கம்,செம்மஞ்சேரி,கண்ணகி நகர்,கானத்தூர்,சோமங்கலம், மணிமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் இவற்றில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லையில் இருந்து ஐந்து காவல் நிலையங்களையும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லையில் இருந்து இரண்டு காவல் நிலையங்களையும் பிரித்து தாம்பரம் காவல் ஆணையரகத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

ஆவடி காவல் ஆணையரகம்

அதேபோல் ஆவடி காவல் ஆணையரகத்தின்கீழ் 25 காவல் நிலையங்கள் இயங்குகின்றன.

மாதவரம் பால் காலனி, செங்குன்றம், மணலி, சாத்தாங்காடு, மணலி புதுநகர், எண்ணூர், மாங்காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, முத்தா புதுப்பேட்டை, பட்டாபிராம், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், திருவேற்காடு, எம்.ஆர்.எம்.சி, ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், வெள்ளவேடு,செவ்வாய்பேட்டை,சோழவரம், மீஞ்சூர்,காட்டூர்.

இவற்றில் திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லையில் இருந்து ஐந்து காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு ஆவடி ஆணையரகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் 137 காவல் நிலையங்களோடு செயல்பட்ட சென்னைப் பெருநகர காவல் துறையில் தற்போது 33 காவல் நிலையங்கள் குறைந்து 104 காவல் நிலையங்களோடு செயல்படுகிறது.

இதில் 20 காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரகத்திலும், 13 காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரகத்திலும் சென்னைப் பெருநகர காவல் துறையில் இருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:2021ஆம் ஆண்டில் 3,325 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.