ETV Bharat / city

'எங்களுக்கும் பாய தெரியும்' - மதுரை ஆதீனத்திற்கு சேகர் பாபு பதிலடி

author img

By

Published : Jun 7, 2022, 3:24 PM IST

ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை மதுரை ஆதீனம் உருவாக்க முயல்கிறார். எங்களுடைய பதுங்களை ஆதீனம் பயமாக கருதக்கூடாது, எங்களுக்கும் பாய தெரியும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனத்திற்கு சேகர் பாபு பதிலடி
மதுரை ஆதீனத்திற்கு சேகர் பாபு பதிலடி

சென்னை: சத்தியவாணி முத்து நகரில் குடியிருக்கும் மக்களை புளியந்தோப்பு கே.பி. பூங்கா குடியிருப்புக்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், துணை ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் மதுரை ஆதீனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, "முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அடக்கி வாசிக்கும் எங்களுக்கு எகிறி அடிக்க முடியும். ஆனால் நன்றாக இருக்காது என்பதால் பின்னால் வருகிறோம். எங்களுடைய பதுங்களை ஆதீனம் பயமாக கருதக்கூடாது, எங்களுக்கும் பாய தெரியும். மதுரை ஆதீனம் அரசியல்வாதி போல் பேசிக் கொண்டிருப்பதை அறநிலையத்துறை அனுமதிக்காது. ஆதீனங்கள் உரிமையில் தலையிடக் கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் முயற்சி செய்கிறார். ஆதீனங்கள் சைவத்தை சார்ந்தவர்கள், சைவம் என்றாலே தமிழ், தமிழை வளர்க்கும் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி.

அரசியல் வாதிகள் தான் ஆட்சியில் பொறுப்பில் வருகிறார்கள். நாங்கள் தலையிடக் கூடாது என்று சொல்லும் உரிமை மதுரை ஆதீனத்துக்கு இல்லை. மதுரை ஆதீனம் தொடர்ந்து இதுபோல் பேசினால் பதில் சொல்ல பல வகைகள் இருக்கின்றன என்பதை அடக்கத்தோடு சொல்கிறேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ரேஷன் கடை கதவை உடைக்க முயற்சிக்கும் கரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.