ETV Bharat / city

நீதிபதி கிருபாகரன் நாளையுடன் பணி ஓய்வு - அவர் அளித்த முக்கிய தீர்ப்புகள்

author img

By

Published : Aug 19, 2021, 7:46 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய மூத்த நீதிபதி என். கிருபாகரன் நாளை (ஆக 20) பணி ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி கிருபாகரன் நாளையுடன் பணி ஓய்வு
நீதிபதி கிருபாகரன் நாளையுடன் பணி ஓய்வு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடந்த 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் தாலுகா, நெடும்பிறை கிராமத்தில் பிறந்தவர். தனது சட்டப்படிப்பை முடித்த இவர் 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார்.

நீதிபதி கிருபாகரன்
நீதிபதி கிருபாகரன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கிய நீதிபதி கிருபாகரன், சிவில் வழக்குகள், வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் ஆனார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஒன்றிய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றிய கிருபாகரன் 2009ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நிரந்தர நீதிபதியானார். ஆகஸ்ட் 20ஆம் தேதி 62 வயதை பூர்த்தி செய்வதையொட்டி நாளை (ஆக 20) அவர் ஓய்வு பெறுகிறார்.

தன்னுடைய பதவி காலத்தில் நீதிபதி என். கிருபாகரன் வழங்கிய முக்கிய தீர்ப்புகள், உத்தரவுகள், வழிகாட்டுதல்களை விரிவாக பார்க்கலாம்:

  • நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சியினர் தமிழ்நாடு மாணவர்களை ஏமாற்ற கூடாது, உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என உத்தரவு.
  • நீட் தேர்வு மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்க அரசுக்கு உத்தரவு.
    நீட் தேர்வு
    நீட் தேர்வு
  • நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியால் ஏற்பட்ட மாணவர்கள் தற்கொலையை புனிதப்படுத்துவதை நிறுத்த அரசியல் கட்சியினருக்கு உத்தரவு.
  • குற்றாலம் அருவியை சுத்தப்படுத்தும் வகையில் எண்ணெய் குளியலுக்கு முற்றிலுமாக தடை விதித்தார்.
  • பாலியல் வன்கொடுமைக்கு தண்டனையாக குற்றவாளிக்கு மருத்துவ ரீதியான ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு.
  • சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் சர்வதேச அளவில் அழகுபடுத்தும் பணி துரிதமாக எடுக்கப்பட்டது.
  • அரசியல் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்யும் சட்டத்தை இயற்றுவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை.
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசின் சட்டத்துக்கு தனது தீர்ப்பின் மூலமாக அடித்தளமிட்டவர்.
  • பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதைத் தடுக்க உத்தரவு.
    புகையிலை விற்பனை
    புகையிலை விற்பனை
  • கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தப்படுத்த கூடாது என பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு.
  • மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் மட்டுமல்ல, கைது நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு அறிவுறுத்தல்.
  • முறையான ஒதுக்கீடு இல்லாததால் மறுவரையறை செய்யும் பணி முடியும் வரை உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தல்.
  • திரைப்பட நடிகர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கபாலி பட வழக்கில் நடிகர்களுக்கு அறிவுரை.
  • தொல்லியல் துறையின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அரசுக்கு உத்தரவு.
  • சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் டிக் டாக் செயலியை ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முன்பாகவே தடை செய்து உத்தரவு.
    டிக் டாக்
    டிக் டாக்
  • குழந்தைகளுக்கு இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என உத்தரவு.
  • இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமில்லாது, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு.
    தலைக்கவசம்
    தலைக்கவசம்
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக தீபா, தீபக் அறிவிப்பு.
  • குரு பூஜைகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல்கள்.
  • ஆக்கிரமிப்பில் இருந்து சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு.
  • வேக கட்டுப்பாட்டு கருவிகளை வாகனங்களில் பொருத்த உத்தரவு.
  • வழக்குகளின் தேக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் நான்கு குடும்ப நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு.
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகனுக்கு வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதி.
    முருகன் - நளினி
    முருகன் - நளினி
  • மதுரையில் உயர் நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள டாஸ்மாக் கடையை மூடியது.
  • மருத்துவர்கள் கவனக்குறைவால் ஹெச்ஐவி பாசிட்டிவ் ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை உத்தரவு.
  • சென்னை மாநகராட்சி சொத்து வரியை 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்துவதற்கான வழிகாட்டுதல்.
  • புதிய சாலைகளை அமைப்பதற்கு முன் பழைய சாலையை தோண்டி எடுத்த பின் அமைக்க உத்தரவு.
  • பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பரிந்துரை.
  • பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராம்குமார் உடலை உடற்கூராய்வு செய்ய உத்தரவு.
  • மெட்ராஸ் சட்டக் கல்லூரிகளின் இடமாற்றம், சட்டக் கல்லூரிகளில் 109 உதவி பேராசிரியர்கள் நியமனம்.
  • கரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு காண அரசுக்கு உத்தரவு.
    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
  • உள் காயங்களையும் இஎஸ்ஐ சட்டத்தில் சேர்க்க வழிகாட்டுதல்.
  • அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 144 மருத்துவ மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க உத்தரவு.
  • பி.எஸ்.எம்.எஸ். படிப்பில் திருநங்கையைச் சேர்க்க உத்தரவு

என தனது ஓய்வு முன்பு வரை பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை நீதிபதி கிருபாகரன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கொலிஜியம் பரிந்துரை செய்தி' - ஊடகங்கள் மீது தலைமை நீதிபதி ரமணா அதிருப்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.