ETV Bharat / city

'கரோனா மூன்றாம் அலை வருவதைத் தடுத்து நிறுத்த முடியாது'

author img

By

Published : May 26, 2021, 11:07 PM IST

கரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை போதுமான அளவு உற்பத்தி இல்லை என்றால், கரோனா மூன்றாம் அலை வருவதைத் தடுத்து நிறுத்த முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'கரோனா மூன்றாம் அலை வருவதை தடுத்து நிறுத்த முடியாது' - ஜி. ராமகிருஷ்ணன்

டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கறுப்புக் கொடி ஏற்றினர்.

அதனைத்தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலாவதாக பேசிய மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் கூறியதாவது, "இன்றைய தினம் நாடு முழுவதும் மோடி அரசை எதிர்த்து ஒரு துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்கள். அதனை ஏற்று இன்று கட்சி அலுவலகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. டெல்லி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஏறக்குறைய 400 பேருக்கு மேல் அந்த களத்தில் இறந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

ஒரு போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க கூட மோடியால் முடியவில்லை. 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்த கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களை எரிக்க முடியாமல் கங்கை ஆற்றில் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், போதுமான அளவு மருந்து இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. எதுவுமே இல்லாத மோசமான ஆட்சியாக தான் மோடி அரசு உள்ளது’’ என குற்றம் சாட்டினார்.

ஜி. ராமகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்
தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்காமல், குஜராத்திற்கு மட்டுமே வழங்கி வருகிறார். அவர் இந்தியாவிற்கு பிரதமரா அல்லது குஜராத்திற்கு பிரதமரா எனக் கேள்வி எழுப்பினார். வேளாண் திருத்த சட்டத்தினை ரத்து செய்ய நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்மானம் நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் கூறினார்; நிச்சயம் அவர் செய்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அளவுக்கு நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றால், அதற்கு அதிமுக தோல்வி தான் காரணம். எனவே, எதிர்க்கட்சி எங்களை குற்றம்சாட்டுவது நியாயம் இல்லை என அவர் தெரிவித்தார்.
பத்ம சேஷாத்ரி பள்ளி முறைகேடு வன்மையான கண்டனத்திற்கு உரியது. அந்தப் பள்ளியில் நீண்ட காலமாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது அந்த நிர்வாகமும் உடந்தையாக உள்ளது என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு.
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என கூறியதற்குப் பதில் அளித்த பாலகிருஷ்ணன், வயது வரம்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும்; பாஜக சம்பந்தம் இல்லாமல் இது போன்று பேசி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

2ஆவது அலை காரணமாக 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் அரசு கணக்கின்படி இறந்துள்ளார்கள். தடுப்பூசியைப் பொறுத்தவரை மத்திய அரசாங்கம் மாநில அரசிற்குத் தேவையான மருந்துகளை கொடுக்கவில்லை. போதுமான உற்பத்தி இல்லை என்றால், மூன்றாம் அலை வருவதைத் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.