ETV Bharat / city

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதா...தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம்

author img

By

Published : Aug 20, 2022, 12:21 PM IST

துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது என்றும், அரசியல் தலையீட்டுக்கு வழிவகுப்பதாகவும் என கூறி விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதா...தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம்
பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதா...தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பலகலைக் கழகங்களின் வேந்தரான கவர்னருக்கு இருந்து வருகிறது. துணை வேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர், கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர்.

இந்ததேடல் மற்றும் தேர்வுக் குழு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து 3 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்யும். இவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமித்து உத்தரவிடுவார்.

இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் 'தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசை கவர்னர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மசோதா குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களை கோரி கடிதம் எழுதி உள்ளார். 'துணைவேந்தர்களை அரசே நியமிப்பது என்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது, அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது' என கூறி சில விளக்கம் அளிக்க ஆளுநர், தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி உயர்வு... அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.