ETV Bharat / city

டிடிவி தினகரனுக்கு செக் வைத்த சுயேச்சைகள்...!

author img

By

Published : Apr 4, 2019, 11:24 AM IST

Updated : Apr 4, 2019, 11:54 AM IST

சென்னை: அமமுகவின் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளருக்கு எதிராக அதே தொகுதியில் அவர்களின் பெயரில் குக்கர் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ttv

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தங்களது ஆளுமையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல் அதிமுகவிலிருந்து கழற்றிவிடப்பட்ட டிடிவி தினகரன் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தேசியக் கட்சிகளை தன்னை நோக்கி படையெடுக்க வைப்பதற்காக கடுமையாக உழைத்துவருகிறார்.

ஆனால், ஆர்.கே.நகரில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற குக்கர் சின்னமே தற்போதைய தேர்தலுக்கும் வேண்டும் என அமமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்காமல் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதனால் அக்கட்சியினர் சிறிது அப்செட் ஆனாலும் இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம் என்று சூளுரைத்து கடும் களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் அங்கு காமராஜ் என்ற சுயேச்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சுயேச்சை
சுயேச்சை வேட்பாளர் சின்னம்

மேலும்,பாப்பிரெட்டிப்பட்டியில் அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியிலும் அமமுக வேட்பாளர் பெயரான ராஜேந்திரன் என்ற சுயேச்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திரன்
சுயேச்சை வேட்பாளர் ராஜேந்திரன் சின்னம்

அதுமட்டுமின்றி அரூரில் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆர்.முருகனுக்கு எதிராக, முருகன் என்ற பெயரிலேயே சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

முருகன் சின்னம்
சுயேச்சை வேட்பாளர் முருகன்

சாத்தூரிலும் அமமுக வேட்பாளர் எஸ்.சி சுப்பிரமணியம் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிட இருக்கும் நிலையில் அங்கும், அவரது பெயரிலேயே சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். தற்போது இந்த தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'டிடிவிக்கு தென் மாவட்டங்கள் மட்டுமின்றி பல இடங்களில் செல்வாக்கு பெருகிவருகிறது. அதனால் அமமுக வேட்பாளரின் பெயர் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களை களமிறக்கி அமமுகவின் வாக்குகளை பிரித்து வெற்றியை பறிக்க மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன. ஆளும் தரப்பினரின் அழுத்தத்தில்தான் தேர்தல் ஆணையம் இவ்வாறு சுயேச்சைகளுக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

நடுநிலையோடு செயல்படும் அமைப்பு தேர்தல் ஆணையம் என்ற கூற்று இதன்மூலம் மரணித்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டது. இருந்தாலும் சூழ்ச்சிகள் அனைத்தையும் சுக்கு நூறாக்கி இத்தேர்தலில் எங்களது பலத்தை காண்பித்தே தீருவோம்' என அமமுகவினர் சூளுரைத்திருக்கின்றனர்.

Intro:Body:

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையை குறை கூறினால் தேசபக்தர்களுக்கு கோபம் வருகிறது 



திருவாரூரிலே டிடிவி வேட்பாளர் எஸ் காமராஜ். அவருக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம். 



இன்னொரு சுயேச்சைக்கு குக்கர். அவர் பெயரும் காமராஜ். இது எப்படி?



பாப்பிரெட்டிப்பட்டியில் டிடிவி வேட்பாளர் டிகே ராஜேந்திரனுக்குப் பரிசுப் பெட்டகம்.இன்னொரு சுயேச்சைக்கு குக்கர். அவர் பெயரும் ராஜேந்திரன். ஆஹா.



அருரில் டிடிவி வேட்பாளர் ஆர் முருகன். குக்கர் வாங்கிய சுயேச்சை வெறும் முருகன். சபாஷ்.



சாத்துரில் அமமுக வேட்பாளர் எஸ் சி சுப்பிரமணியம். குக்கர் பெற்ற சுயேச்சை வெறும் சுப்பிரமணியம். அப்படிப் போடு.



திமுக வேட்பாளர் இல்லங்களில் ரெய்ட் நடக்கிறது. வாழ்க. 



ஆனால் பணம் எங்கு புதைக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழ் நாட்டுக்கே தெரியும். 



தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடக்கும் என்று நம்புவோருக்கு பெப்பே.





#ஷ்யாம் #பத்திரிக்கையாளர் ..!!


Conclusion:
Last Updated :Apr 4, 2019, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.